• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-06 11:07:49    
பெய்ஜிங்கில் இளைஞர் விடுதிகள்

cri

இளைஞர் விடுதிகள், உலகளவில் மிக பெரிய தங்குமிட வசதிகள் கொண்ட தொடரமைப்பாக மாறியுள்ளது. ஆண்டுத்தோறும், உலகில் மொத்தம் ஒரு கோடி இளம் வயதுடைய பயணிகள், அதன் கிளை விடுதிகளில் தங்குகின்றனர். பெய்ஜிங்கில் இளைஞர் விடுதிகள் தொடரமைப்பின் கிளை விடுதிகள் அதிகமாக உள்ளன.

பெய்ஜிங்கின் வடபகுதியிலுள்ள சுங் குவான் சுன் பிரதேசத்தில், பல்கலைக்கழகங்களும் ஆய்வகங்களும் நிறைந்து இருப்பதால், அங்குள்ள யூனி சர்வதேச இளைஞர் விடுதியில் மாணவர்கள் மிகவும் அதிகம்.

இந்த விடுதி, திட்டவட்டமான உணர்வுபூர்வ தலைப்புகளில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. தவிர, நூலகம், திரைப்பட அறை, சுற்றுப்புற பல்கலைக்கழகங்களில் இலவச பயணம் முதலியவை, அதன் தனிச்சிறப்பியல்புகளாகும். குறிப்பாக ஒவ்வொரு அறையிலும் இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. விருந்தினர் செல்வி சியு சாங்சாங் கூறியதாவது:

இந்த விடுதியில், இலவசமாக இணைய வசதியைப் பயன்படுத்தலாம். விருந்தினர்கள் சொந்த கணிணி கொண்டு வந்ததால், அவ்வபோது இணையத்தில் உலாவரலாம் என்றார் அவர்.

ஒர் இடத்துக்குச் செல்லும் போது, நீங்கள் உள்ளூர் பண்பாட்டை உணர்ந்து கொள்ள விரும்பினால், கோயில் அருகில் வீடு என்னும் இளைஞர் விடுதிக்கு வாருங்கள்.

பெய்ஜிங் மாநகரின் மையப்பகுதியின் சிறிய வீதியில் அமைந்துள்ள இந்த விடுதி, பெய்ஜிங்கின் நகரப் பண்பாட்டுடன் மிகவும் நெருங்கியது. ஹுதுங் என்ற சீன சிறிய வீதியும், நாலா பக்க வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட கட்டிடமும், பெய்ஜிங்கின் பொது மக்கள் பண்பாட்டின் சின்னங்களாகும். இந்த விடுதியில் சுமார் 30 படுக்கைகள் மட்டுமே. நாலா பக்க வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட கட்டிட

கட்டமைப்பினால், பயணிகள் வெளிநாட்டு நண்பர்களை அறிந்துகொள்ளும் இடமாக உள்ளது. அதன் திறந்த வெளி முற்றத்தில், இரண்டு நீண்ட மர மேசைகள் உள்ளன. வானின் நட்சத்திரங்களின் ஒளியில், தேனீர் குடித்து, பல்வேறு இடங்களிலிருந்து வந்த பயணிகளுடன் தாராளமாக அளவளாவுவது மகிழ்ச்சி தருகிறது. பிரான்ஸ் பயணியர் ஸ்டேவென்ஸ் மனநிறைவுடன் கூறியதாவது:

இந்த விடுதி, நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள போதிலும், அதன் அறை வாடகை ஒப்பீட்டளவில் குறைவு என்றார் அவர்.

அவருடைய தோழி அயர்லாந்த் பயணி செல்வி ஜோன்ஸ், இதில் பல நண்பர்களை அறிந்துகொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நாங்கள் நேற்று பெய்ஜிங் வந்தடைந்தோம். இந்த விடுதியின் மதுவகத்தில் பயணியர் பலருடன் பழகி நணபர்களாகி விட்டோம். அவர்களில் சிலர் சற்று முன்னதாக பெய்ஜிங் வந்தடைந்து, சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றவர்கள். சிலர் இங்கு ஒரு திங்கள் அல்லது இரண்டு திங்கள் காலமாக தங்கியிருக்கின்றவர்கள் என்றார் அவர்.

வசதியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதை தவிர, இளைஞர் தங்குமிடங்களில் அடிக்கடி நிகழ்கின்ற வெளிநாட்டு நட்புறவுகள், காதல் கதைகள், சிறப்பான சுற்றுலா கருத்துக்கள் முதலியவை பயணியரை ஈர்த்து வருகின்றன.