• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-08 00:00:24    
மங்கோலிய இனத்தின் விழாக்கள்(ஆ)

cri

முன்று, விளக்கு விழா

சந்திர நாள் காட்டின்படி 10ம் திங்களின் 25ம் நாளில், இரவு வந்த போது, ஒவ்வொரு குடும்பமும், மங்கோலிய இன மக்கள் விளக்குகளை ஏற்றி கொண்டாட்டம் செய்கின்றனர். ஆனால், தற்போது மங்கோலியாவில் சில இடங்களின் மக்கள் விளக்குகள் ஏற்ற மாட்டார்கள். அதற்கு பதிலாக பல்வகை பொழுது போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். குதிரைப் போட்டி, ஒட்டகப் போட்டி, மற்போர், அம்பு எய்தல், பாடல் பாடுவது தேசிய இன ஆடல் முதலிய நடவடிக்கைகள் இவ்விழாவில் நடைபெறுகின்றன. இவ்விழாவில் அரங்கேற்றப்படுகின்ற மங்கோலிய இனத்தின் tuerhute பிரிவின் நடனம், புல்வெளி தேசிய இனத்தின் தனிச்சிறப்பு வாய்ந்தது.

நான்கு, புத்தாண்டு விழா

பண்டைகால மங்கோலிய இன மக்கள், புத்தாண்டு விழாவை, வெள்ளை விழாவாகவும் அழைத்தனர்.

இவ்விழா, வெள்ளை நிலாவையும் குறிப்பிடுவதோடு இதன் பெயர், பால் உணவின் வெள்ளை வண்ணத்துடன் தொடர்பு கொண்டு இருப்பதால், மங்களம் என்ற பொருளையும் தருகிறது.

ஆண்டின் இறுதியில் அனைத்து குடும்பங்களும் விளக்குகளை ஏற்றுகின்றன. ஆண்டின் கடைசி நாளில், முற்றங்களையும் வீடுகளையும் துப்புரப்படுகின்றனர். இரவில் மூதாதையர்களை வழிபடுகின்றனர். இளைஞர்கள் கூடி பாடல் பாட்டு நடனம் செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக, மங்கோலிய இனத்தின் வசந்த விழா, ஹன் இனத்தின் பழக்க வழக்கங்களை உட்கொண்டது. ஆனால், சில பாரம்பரிய பழக்க வழக்கங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன.

புத்தாண்டின் முதல் நாளில், அனைவரும் புதிய ஆடைகளை அணிந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இளையவர்கள் மூத்தவர்களை வணக்கம் செய்து, புகையையும், மதுபானத்தையும் வழங்குகின்றனர். பின்பு, மூத்தவர்கள் இளையவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து சிற்றலறை பணம் கொடுக்கின்றனர்.

அதிகாலை முதல், ஒரு பெரிய குடும்பத்தின் உறுப்பினர்களும் உறவினர்களும் பரஸ்பர வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். தூரத்தில் வாழ்ந்தவர்கள் குதிரையில் அல்லது வாகனங்களில் வீட்டுக்குத் திரும்பி வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.

தொலைதூர மேய்ச்சல் பிரதேசத்தில், ஜனவரி 16ம் நாள் அதிகாலையில், சூரிய வரும் முன், நாண்பர்கள் தூங்கிய போது, அவர்களின் முகங்களில் களப்பு மை வைப்பது வழக்கம்.

ஐந்து—தீ விழா

தீ விழா, தீயை வழிபடும் விழாவாகும். பண்டைகால மங்கோலிய மக்கள் தீ மீதான வழிபாடினால் இவ்விழா நடத்தப்பட்டது. சந்திர நாட்களின்படி டிசம்பர் திங்களின் 23ம் நாளிரவில் இது நடைபெறுகிறது. வழிபாடு துவங்கும் முன், குடும்பத்தினர் அனைவரும் முற்றத்தின் மையத்தில் நின்று, குடும்பத்தின் மூத்தவர், சாம்பிராணியை ஏற்றி, எண்ணெய், மதுபானம், இறைச்சி முதலிய பொருட்களை தீயில் வைக்கிறார். அவரது தலைமையில், அனைவரும் தீயை நோக்கி வழிபாடு செய்கின்றனர். அடுத்த ஆண்டில் அறுவடை பெற்று, மக்களும் கால்நடைகளும் நலமாக இருந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென அவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

ஆறு—aobao வழிபாடு

aobao வழிபாடு, ஒரு முக்கிய விழாவாகும். Aobao என்றால், ச மன் மதத்தின் கடவுள்கள் வசிக்கின்ற மண் குவியல் அல்லது கல் குவியல் என்பது பொருள். இவ்விழாவில், ஆயர்கள் அணியில் aobaoக்கு சென்று வழிபாடு செய்கின்றனர். மாடு ஆடு அறைச்சிகளையும் பால் உற்பத்திப் பொருட்களையும் aobaoக்கு முன் வைத்து, சாம்பிராணியை ஏற்றி மதத் திருமறை ஓடுகின்றனர். மக்கள், வலது பக்கமாக 3 முறை சுற்றி சென்று கால்நடை வளர்ப்பில் அறுவடை பெற விருப்பம் தெரிவிக்கின்றனர்.

ஏழு—maideer திருவிழா

maideer விழா, mile என்ற புத்த கடவுளை நினைக்கின்ற திருவிழாவாகும். ஜனவரி திங்களின் 15ம் நாளில் ஒவ்வொரு கோயில் mile என்ற புத்த கடவுளின் வருவப்பட்டத்தை மாட்டி, maideer திருவிழாவைக் கொண்டாடுகிறது. கோயிலுக்கு அருகிலான ஆயர்கள் வழிபாடு செய்கின்றனர். வணக்கம் செய்த பின், பிரதேசத்தின் தலைவரின் தலைமையில், அம்பு எய்தல், குதிரைப் போட்டி, மற்போர் முதலிய மங்கோலிய இனத்தின் பாரம்பரிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.