• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-07 09:36:30    
கிராம அதிகாரியாக வேலை செய்யும் Jiang Fang Yuan

cri
22 வயதான Jiang Fang Yuan அம்மையார் நகரில் வளர்ந்தார். அவர் பிறந்த ஊர், ஒரு கிராமமாகும். கிராமத்தில், நிதியுதவியைத் தவிர, தொழில் நுட்பம் மற்றும் திறமைசாலிகளும் மிகவும் தேவைப்படுவதை அவர் புரிந்து கொண்டுள்ளார். 2007ஆம் ஆண்டு ஜூலை திங்களில் அவர் பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பின், Jiang Su மாநிலத்தில் உள்ள Shuang Nong கிராமத்தில், அதிகாரியாக பணிபுரியத் துவங்கினார்.
அக்கிராமத்தில் பணிபுரிந்த துவக்க காலத்தில், வேலையிலான முன்னனுபவம் இல்லாததால், அவர் என்ன செய்வதென தெரியாமல் விழித்தார். கிராமத்தில் செவ்வனே வேலை செய்ய வேண்டுமானால், முதலில் தமது மன நிலையை மாற்ற வேண்டும் என்றும், வெகு விரைவில் புதிய சூழலுக்கு ஏற்ப மாற வேண்டும் என்றும் அவ்வட்டத் தலைவர்கள் அவரிடம் கூறினர். எனவே, கிராமத்தின் பொருளாதாரம், நிலவியல், பண்பாடு முதலியவை பற்றி அவர் ஆய்வு செய்து, தகவல்களை நேரடியாகவே திரட்டினார். Jiang Fang Yuan அம்மையார் Shuang Nong கிராமத்தில் வேலை செய்த துவக்கத்தில், பல கிராமவாசிகள் அவரை பற்றி கேள்விப்படவில்லை. ஆனால், நாள்தோறும் அவர் ஒரு விவசாயக் குடும்பத்துக்கு சென்று, அக்குடும்பத்தின் நிலைமை பற்றி அறிந்து கொள்ள தொடங்கினார். தவிர, அவர் அடிக்கடி விவசாயிகளுடன் இணைந்து உரையாடி, அவர்களின் வாழ்க்கையை பற்றி புரிந்து கொண்டார். 6 திங்களுக்கு பின், பெரும்பாலான கிராமவாசிகள், அவரை அறிய வந்தனர்.

வணக்கங்கள் தெரிவிக்கும் ஒரு சொற்றொடர் மட்டுமே கூறி, பிறருக்கு அன்பு காட்டினாலும், தாம் வெற்றி பெற்றதாகவே அவர் கருதினார். 2007ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பாதியில், வறுமை ஒழிப்பு பணியில் ஈடுபடும் Huai Yin பிரதேசத்தின் நீர் வள பணியகத்துடன் அவர் தொடர்பு கொண்டார். அயரா முயற்சிகளின் மூலம் Shuang Nong கிராமத்தில் இன்னல் மிகுந்த 36 குடும்பங்களுக்கு உதவி செய்ய, 7200 யுவான் உதவித்தொகையைப் பெற்றார். இலையுதிர்கால விழாவை முன்னிட்டு, அவர் அந்த 36 விவசாய குடும்பங்களுக்கும் உதவித்தொகை வழங்கி, இன்பமாக விழாவை கொண்டாட வாழ்த்தினார். அக்குடும்பத்தினர் பணத்தை பெற்றுக்கொண்டப் பின், Jiang Fang Yuan அம்மையாருக்கு நன்றி தெரிவித்தனர். "உங்களுக்கு அதிக உதவி செய்யவில்லை என்றும், இனியும் உதவி செய்ய முயற்சி செய்வேன்" என்றும் விவசாயிகளிடம் அவர் கூறினார். அதற்கு பின், அவருக்கும், விவசாயிகளுக்குமிடை நட்புறவு அதிகரித்தது.
Shuang Nong கிராமத்துக்கு வந்த பின், அக்கிராமத்தின் பதிவேடுகளை தொகுத்து பதிப்பாக்குவதற்கு அவர் பொறுப்பேற்றார். கிராமவாசிகளின் தகவல்களைச் சரிபார்ப்பது, பல்வகை தரவுகளை இணைப்பது, படிவத்தை வரைந்து ஆகியவை அவரது பணியில் இடம்பெ அறிக்கையை தொகுத்து எழுதுவது ஆகியவை அவரது பணியில் இடம்பெற்றன.
கடந்த பிப்ரவரி திங்கள், Jiang Su மாநிலத்தின் அறிவியல் நுட்பப் பணியகம், பொருளாதாரம் பலவீனமாக இருக்கும் கிராமங்களுக்கு சிறப்பு நிதித்தொகையை வழங்கும் உதவி திட்டத்தை அறிந்த Jiang Fang Yuan அம்மையார், உடனடியாக வட்டத் தலைவரிடம் இது பற்றி தெரிவித்து, விண்ணப்ப அறிக்கையை தொகுத்து எழுதினார். நாள்தோறும் அவர் கிராமத்தின் விளை நிலங்களில் ஆய்வு செய்து, மண் தரத்தை பரிசோதனை செய்து, அக்கிராமத்தின் ஊழியர்களுடன் விவாதித்தார். Jiang Fang Yuan அம்மையாரின் ஏற்பாட்டில், வெள்ளரிக்காய் பயிரிட விரும்பிய விவசாய குடும்பங்கள், Ding Ji வட்டத்துக்கு சென்று, ஒரு புதிய வகை வெள்ளரிக்காய் பற்றி பரிசோதனை செய்தனர். இறுதியில் 50 Mu (சுமார் 3.3 ஹெக்டர்)நிலப்பரப்புடைய விளை நிலங்களில்,

20 சூரிய ஆற்றலால் செயல்படும் கூடாரங்களை அமைத்து, வெள்ளரிக்காய் மற்றும் வைக்கோற்காளானின் உயர் பயன் தரும் பயிரிடுதலை வளர்க்கும் திட்டம் உறுதிப்படுத்தப்பட்டது. மார்ச் திங்கள் இறுதியில், இத்திட்டம் Jiang Su மாநிலத்தின் அறிவியல் நுட்ப பணியகத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது, Shuang Nong கிராமத்தில், உயர் பயன் தரும் வேளாண் துறை சீராக வளர்ந்து வருகின்றது. சூரிய ஒளி வெப்ப அறை விரைவில் கட்டிமுடிக்கப்படவுள்ளது.
பல்வகை பணிகளை செவ்வனே செய்யும் வேளையில், Jiang Feng Yuan அம்மையார் அறிவுகளை கற்றுக்கொண்டுவிட்டார். கிராமவாசிகளுக்கு மேலும் செவ்வனே சேவை புரியும் பொருட்டு, அரசின் புதிய கொள்கைகளில் அவர் கவனம் செலுத்தி, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் அரசின் கொள்கைகள், புதிவகை சோஷலிச கிராமத்தின் வளர்ச்சி பற்றிய ஆவணங்கள் ஆகியவற்றை உணர்வுபூர்வமாக படிக்கிறார்.
கடந்த ஓராண்டுக்கால முயற்சி மூலம், கிராமத்தில் சேவை புரிவது என்ற தமது கருத்தில் அவர் மேலும் உறுதியாக நிற்கின்றார். ஒரு கிராம அதிகாரியாக மாற தெரிவு செய்ததால், இப்பாதையில் உறுதியாக நடைபோட விரும்புவதாக அவர் கூறினார்.