• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-07 09:39:11    
அமெரிக்க NBA கூடைப்பந்தாட்ட மன்றங்களிடை போட்டி

cri
அமெரிக்க NBA கூடைப்பந்தாட்ட மன்றங்களிடை போட்டி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அக்டோபர் 31ம் நாள் நடைபெற்ற போட்டிகளில், New Orleans hornets அணி, 108-95 என்ற புள்ளிகள் கணக்கில் phoenix suns அணியை தோற்கடித்தது. DENVER NUGGETS அணி, 97-104 என்ற புள்ளிகள் கணக்கில், LOS ANGLES LAKER அணியிடம் தோல்வியடைந்தது. LAKER அணியின் KOBE BRYANT 33 புள்ளிகளை பெற்றார். சீனாவின் புகழ் பெற்ற வீரர் யாவ் மிங்கின் Houston rockets அணி 89-77 என்ற

புள்ளிகள் கணக்கில் oklahoma thunder அணியை தோற்கடித்தது. கடந்த 3 போட்டிகளில் Houston rockets அணி தொடர்ந்து வெற்றி பெற்றது. New jersey nets அணி, 97-105 என்ற புள்ளிகள் கணக்கில் golden state warriors அணியிடம் தோல்வியடைந்தது.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், பல்வகை கொண்டாட்ட விழாக்களில் கலந்துகொள்வதால், ஜமைக்காவின் புகழ்பெற்ற தடகள வீரர் உசேன் bolt சலிப்படைவதாக அவர் 2ம் நாள் தெரிவித்தார். தடகள விளையாட்டரங்கில் மீண்டும் திரும்புவது, boltகின் மிகப் பெரிய விருப்பமாகவுள்ளது.

22 வயதான உசேன் bolt 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டி ஆகிய தடகள போட்டிகளில் தங்கப்பதக்கங்களை பெற்று, உலக சாதனைகளை உருவாக்கினார்.
2008ம் ஆண்டு தேசிய வாள்வீச்சு சாம்பியன் பட்டப் போட்டியின் 2ம் கட்ட இறுதி போட்டி, அக்டோபர் 31ம் நாள் சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள நான் ஜிங் நகரில் முடிவடைந்தது. ஜியாங் சூ அணி, அன்றைய போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்றது. இப்போட்டியில் ஜியாங் சூ அணி, மொத்தம் 3 தங்கப்பதக்கங்களை பெற்றது.
6வது சீன தேசிய விவசாய் விளையாட்டுப் போட்டி நவம்பர் முதல் நாள் சீனாவின் தென் பகுதியிலுள்ள பூ ச்சியன் மாநிலத்தின் சுயன் சோ நகரில் முடிவடைந்தது. இப்போட்டியில் 180க்கு மேலான போட்டிகள் இடம்பெற்றன. 32 பிரதிநிதிக் குழுக்களைச் சேர்ந்த 3000க்கு மேலானோர் இப்போட்டியில் கலந்துகொண்டனர். அவர்களில் தைவானைச் சேர்ந்த வீரர்களும் அடக்கம்.

அடுத்த சீன தேசிய விவசாய விளையாட்டுப் போட்டி ஹூ நான் மாநிலத்தின் நன் யாங் நகரில் நடைபெறும்.
11வது ஆசிய துடுப்பு நீச்சல் சாம்பியன் பட்டப் போட்டி அக்டோபர் 31ம் நாள் சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள யன் தேய் நகரில் துவங்கியது. முதல் நாளில் நடைபெற்ற 10 போட்டிகளில், சீனா, 4 தங்கப்பதக்கங்களையும் 4 வெள்ளிப்பதக்கங்களையும் 2 வெண்கலப்பதக்கங்களையும் பெற்றது.
ஆசிய துடுப்பு நீச்சல் சாம்பியன் பட்டப் போட்டி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இப்போட்டி 1989ம் ஆண்டு நவம்பர் திங்களில் ஜப்பானில் முதன் முதலாக நடைபெற்றது. 10 அணிகள் இப்போட்டியில் கலந்துகொள்கின்றன.