• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-10 09:38:43    
இத்தாலி கால்பந்தாட்ட மன்றங்களிடை போட்டி

cri
இத்தாலி கால்பந்தாட்ட மன்றங்களிடை போட்டியின் 10வது சுற்று போட்டிகள், 3ம் நாள் முழுமையாக முடிவடைந்தன. கடந்த ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்ற inter Milan அணி 3-2 என்ற கோல் கணக்கில் reggina அணியை தோற்கடித்தது. Juventus அணி, 2-0 என்ற கோல் கணக்கில் roma அணியை தோற்கடித்தது.
ac Milano அணி, 1-0 என்ற கோல் கணக்கில் Naples அணியை தோற்கடித்தது. இவ்வெற்றிக்கு பிறகு, ac Milano அணி 22 புள்ளிகளுடன், தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

பிரெஞ்சு பூப்பந்து விளையாட்டுப் போட்டி, 3ம் நாள் முடிவடைந்தது. சீன வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் 3 சாம்பியன் பட்டங்களைப் பெற்றனர். மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீனாவின் இளம் வீராங்கனை வாங் லின், 2-1 என்ற ஆட்ட கணக்கில், சக அணி தோழி ஷியே சின் பாங்கை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார். வாங் லின் பெற்றுள்ள 3வது சாம்பியன் பட்டம், இதுவாகும். அடுத்த ஆண்டு உலக பூப்பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் கலந்துகொள்வது, தனது அடுத்த குறிக்கோள் என்றும். அப்போட்டியில் தனது முதல் உலக சாம்பியன் பட்டத்தை பெற

வேண்டுமென்று விரும்புவதாகவும் வாங் லின் தெரிவித்தார்.
சீனாவின் இணைகள், து ஜின் யு யாங், ஹூ ஹன் பின் யு யாங், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளின் சாம்பியன் பட்டங்களை பெற்றனர்.
உள்ளூர் நேரப்படி நவம்பர் முதல் நாள் இங்கிலந்து கால் பந்தாட்ட மன்றங்களிடை போட்டியின் 11வது சுற்றுப் போட்டியில், Manchester United அணி, 4-3 என்ற கோல் கணக்கில் hull city அணியை தோற்கடித்தது. Chelsea அணி, 5-0 என்ற கோல் கணக்கில் sunderland அணியை தோற்கடித்தது. இப்போட்டிக்கு பின், Chelsea அணி தரவரிசையின் முதலிடத்தில் உள்ளது.

இதர இரு போட்டிகள் எதிர்பாராதவிதமாய் முடிவடைந்தன. Liverpool அணி, 1-2 என்ற கோல் கணக்கில் tottenham hotspur அணியிடம் தோல்வியடைந்தது. Arsenal அணி, stoke city அணியிடம் தோல்வியடைந்தது.
2008ம் ஆண்டு சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் சம்மேளனத்தின் குழல் துப்பாக்கி சுடும் மற்றும் கை துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை நவம்பர் முதல் நாள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் துவங்கியது. அதிகாரப்பூர்வமான போட்டிகள் 3ம் நாள் துவங்கின. சீனாவின் து லி, கோ வேன் சுன் உள்ளிட்ட 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.