• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-11 22:16:55    
ச்சுங்குவோ (zhongguo)

cri

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, மாபெரும் வளரும் நாடு, மிதிவண்டி நாடு, பெருஞ்சுவர் நாடு, அண்மையில் ஒலிம்பிக்கை நடத்தி உலகை அசர வைத்த நாடு என்று பல அடைமொழிகளில் குறிப்பிடும் நாடு செஞ்சீனம் என்று நாம் செல்லமாக அழைக்கும் சீனா. China என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், இந்த நாட்டின் சீன மொழிப் பெயர் ச்சுங்குவோ (zhongguo).

பொதுவாக நாம் ஒருவர் அவரது பெயர் சொல்லக் கேட்டால், நல்ல பெயராக இருக்கிறதே, என்று யோசிப்போம். குழந்தைகளாக இருந்தால், யாரு வச்ச பேர் அது, அழகா இருக்கே என்று வினவுவோம். அதுவும் ஒருவரை அவரது நண்பர்கள் பட்டப்பெயர் அல்லது செல்லப்பெயர் சொல்லி அழைக்கக் கேட்டுவிட்டால் நமக்கு ஆர்வம் கொப்பளிக்கும், ஏன் அவரை அந்தப் பெயர் சொல்லி அழைக்கிறார்கள் என்று. இதற்கு பின்னணியில் எதையும் பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ளும் ஆர்வம், ஆர்வத்தாலும் தூண்டப்படும் மனிதனின் தேடல் இவையெல்லாம் காரணங்களாக அமைகின்றன. அப்படியாக ஒரு ஆர்வத்தின் தூண்டுதலால் எழுந்த தேடலில் கிடைத்த சில தகவல்களையே சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

ச்சுங்குவோ (zhongguo) என்ற சீனாவின் பெயருக்கு பின்னணியில் உள்ள தகவல்களை தேடிய போது, இன்னும் பல தகவல்கள் கிடைத்தன. சுவையான அந்த தகவல்கள் இதோ உங்களுக்காக.

1 2