• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-11 22:16:55    
ச்சுங்குவோ (zhongguo)

cri

ச்சுங்குவோ (zhongguo)

சீனாவின் பெயர் தோற்றம் பற்றி அறிவோம். ச்சுங்குவோ என்பது ச்சுங், குவோ என்று இரண்டு அசைகளாக பிரிக்கலாம். பண்டைய சீனாவில், பொதுவாக குவோ என்பது ஒரு நாட்டையோ, நகரத்தையோ குறித்தது. ச்சுங்குவோ (zhongguo) என்றால் மத்திய நகரம் அல்லது மத்திய நாடு. வரலாற்று ஏடுகளின் படி, ச்சுங்குவோ (zhongguo) என்பதற்கு 5 வெவ்வேறு பொருள் அல்லது அர்த்தங்கள் உண்டு. முதல் பொருள் ச்சுங்குவோ (zhongguo) என்றால் தலைநகரம். இரண்டாவது, பேரரசரால் ஆளப்படும் நாடு. மூன்றாவது, மத்திய சமவெளி நிலம். நான்காவது, உயர்நிலப் பிரதேசம். ஐந்தாவது, ஹான் மற்றும் ஷியா தேசிய இனங்கள் வசிக்கும் பிரதேசம்.

கிமு 206 முதல் கிபி 220 ஆண்டு வரையான ஹான் வம்சக்காலத்தில், பொதுவாக ஹான் தேசிய இனத்தவர்களால் நிறுவப்பட்ட நாட்டையே மக்கள் ச்சுங்குவோ (zhongguo) என்று குறிப்பிட்டனர். இருப்பினும், மற்ற தேசிய இனங்களும் தத்தமது நாடுகளை,பிரதேசங்களை ச்சுங்குவோ (zhongguo) என்றே அழைத்தன. வேடிக்கை என்னவென்றால், தங்களை ச்சுங்குவோ (zhongguo) நாட்டினர் என்றழைத்துக்கொண்ட அவர்கள் மற்ற இனத்தோரை அல்லது தாங்களும் ச்சுங்குவோ (zhongguo) என்று கூறிக்கொண்ட மற்றவரை ஏற்றுக்கொள்ளவில்லை. சுருங்கச்சொன்னால், பண்டைய காலத்தில் ச்சுங்குவோ (zhongguo) என்பது ஒரு உரிச்சொல்லாகவே இருந்ததேயொழிய, பெயர்ச்சொல்லாக இருக்கவில்லை.

மேலும் ஆட்சியிலிருந்தபோது எந்த வம்சத்தினரும் ச்சுங்குவோ (zhongguo) என்ற பெயரை தங்களுக்காக சூட்டிக்கொள்ளவில்லை, ச்சுங்குவோ (zhongguo) என்று தங்கள் ஆட்சியை அழைத்துக்கொள்ளவுமில்லை. அவரவர்களது வம்சப்பெயர்களே அவர்களது ஆட்சியின் பெயர்களாயின.

நவசீனாவின் தந்தை என்றழைக்கப்படும் சுன் யாட் சென் (Sun Zhongshan அல்லது Sun Yixian) தலைமையிலான 1911 ஜனநாயக புரட்சிக்கு பின் ச்சுங்குவோ (zhongguo) என்பது சீன குடியரசின் சுருக்கப் பெயராக பயன்படுத்தப்பட்டது. 1949ம் ஆண்டில் ச்சுங்குவோ (zhongguo) என்பது சீன மக்கள் குடியரசின் சுருக்கப்பெயரானது. பல்வேறு இனங்களும், குறுநிலங்களும் தங்களை ச்சுங்குவோ (zhongguo) என்று அழைத்த பண்டைக்கால நிலை முற்றிலும் மாறி, இன்றைக்கு உலகில் ஒரே சீனா, சீன மக்கள் குடியரசு, ச்சுங்குவோ (zhongguo), பெய்ஜிங்கை தலைநகராகக் கொண்டு வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.


1 2