• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-11 15:02:09    
லொங் ச்சிங் பள்ளத்தாக்கு

cri

லொங் ச்சிங் பள்ளத்தாக்கு, பெய்ஜிங்கின் யன்ச்சிங் மாவட்டத்தில் இருக்கிறது. அதற்கும், பெய்ஜிங் நகரப்பிரதேசத்திற்குமிடையிலான தூரம் 85 கிலோமீட்டராகும். அது, சாய் வாய் சியௌ லி ச்சியங் என்றும் அழைக்கப்படுகின்றது.

யுவான் வம்சக்காலத்தின் பேரரசி யுவான் ழென் ச்சொங், லொங் ச்சிங் பள்ளத்தாக்கின் தென் பகுதியிலுள்ள சியாங் ஷுய் யுவான் என்று அழைக்கப்பட்ட இடத்தில் பிறந்தார்.

லொங் ச்சிங் பள்ளத்தாக்கின் வாயிலில், பழங்கால நகரம் என்ற ஒரு கிராமப்புறம் இருக்கிறது. மிங் மற்றும் சிங் வம்சக்காலங்களில், அது, ஹுவா யுவான் துவுன் என்று அழைக்கப்பட்டது. இக்கிராமப்புறத்தின் வடக்கிழக்குப் பகுதியிலுள்ள ஓர் இடம், ஹான் வம்சக்காலத்தில் ஒரு மாவட்டமாக இருந்தது. அதனால், அது, பழங்கால நகரம் என்று அழைக்கப்படுகிறது.

மிங் மற்றும் ச்சிங் வம்சக்காலங்களில், இது தலைசிறந்த சுற்றுலா இடமாக இருந்தது. 1981ம் ஆண்டு பழங்கால நகர நீர் தேக்கம் கட்டியமைக்கப்பட்டது. பழங்கால நகர ஆற்று ஊற்றுமூல இடம், ஹெய் துவொ மலையின் கிழக்கில் இருக்கிறது. இந்த ஆற்றின் இரு கரைகளில், அதிகமான ஊற்றுகளின் கண்கள் இருக்கின்றன. அவை, எப்போதும் இந்த ஆற்றில் நீரை கொள்ளச் செய்கின்றன. அங்கு, சியோ லியன் குகை, சி குவான் ஷான், சின்காங் ஷான், மா தி தான் முதலிய தனிச்சிறப்பு வாய்ந்த கற்பாறைகள் காணப்படுகின்றன. இது, பெய்ஜிங்கின் 16 புகழ்பெற்ற காட்சிகளில் ஒன்றாகும்.

1986ம் ஆண்டு, பெய்ஜிங்கில், 16 புகழ்பெற்ற காட்சிகளுக்கான தேர்வில் லொங் ச்சிங் பள்ளத்தாக்கு, 10வது இடம் வகித்தது. அதன் தெற்குப் பகுதியில், பா தா லிங் பெருஞ்சுவரும், வட மேற்குப் பகுதியில் சொங் ஷான் மலை காட்டுப் பூங்காவும், மேற்குப் பகுதியில் ஹாய் துவொ மலையும் உள்ளன.