• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-12 10:00:29    
ஒரு வார்த்தைக்கு ஓராயிரம் பொன்

cri

ச்சின் நாட்டின் தலைமையமைச்சராக ஆன பின் கற்றறிந்த மூவாயிரம் கல்விமான்களை தனக்கு உதவியாளர்களை போல் அமர்த்திக்கொண்டான் லியு பூவெய்.
தன்னுடைய பெயரும் புகழும் நீங்காமல் நிலைக்கவேண்டும், நாளைய சமுதாயமும், எதிர்காலச் சந்ததிகளும் தன் அருமை பெருமைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று எண்ணினான் லியு பூவெய். எனவே, தனக்கு உதவியாளர்களாயிருந்த கல்விமான்களை, அவர்களுக்கு தெரிந்த அனைத்தையும் எழுதச்சொன்னான். அவர்களும் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம், வரிசைக்கிரமமாக எழுதிப் பதிவு செய்தனர். இவற்றையெல்லாம் ஒன்று திரட்டி, புத்தகமாக தொகுத்த லியு பூவெய், அந்த திரட்டுக்கு, லியுவின் வரலாற்று பதிவேடு என்று பெயர் சூட்டினான். முழுமையாக வரலாற்று பதிவேடாக, தகவல் களஞ்சியம் போல் அமைந்த அந்தப் புத்தகத்தை அப்போதைய தலைநகரான ஸியன்யாங்கின் சந்தையின் நுழைவாயிலில் தொங்கவிடுமாறு பணித்தான் லியு பூவெய். புத்தகத்தோடு ஒரு பையில் 1000 பொற்காசுகளும், கூடவே ஒரு துண்டு அறிக்கையும் தொங்கவிடப்பட்டது. அறிக்கையில் "இந்தப் புத்தகத்தில் கூடுதலாக ஒரு வார்த்தை சேர்க்கவோ அல்லது குறைக்கவோ முடியும் என்று நம்புகிறவர்கள், நீருபிக்கக் கூடியவர்களுக்கு இந்தப் பையில் உள்ள ஆயிரம் பொற்காசுகள் வெகுமதி" என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் லியு பூவெய் மிகவும் பெயர் பெற்றவன், நாட்டின் தலைமையமைச்சன், ஆற்றல்மிக்க ஒரு கணவான் என்பதால், மக்கள் யாரும் லியு பூவெயின் புத்தகத்தில் திருத்தம் செய்யவும் விரும்பவில்லை, வெகுமதியான ஆயிரம் பொற்காசுகள் பெற துணியவும் இல்லை.
பின்னாளில், மிகச் சிறப்பாக எழுதப்பட்ட அல்லது மிக உன்னதமான இலக்கியப் படைப்புகளை புகழும் வகையில் yi zi qian jin, ஒரு வார்த்தைக்கு ஓராயிரம் பொன் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டது.