• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-12 19:09:35    
ஒற்றுமை மற்றும் பரஸ்பர உதவியில் சீன மக்கள்

cri

இவ்வாண்டு மே 12ம் நாள் சிச்சுவான் வென்ச்சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பேரிடர் நிகழ்ந்த 6 திங்களுக்கு பின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முழு சமூகமும் கவனம் செலுத்தி, புனரமைப்புப் பணிகளுக்கு பங்காற்றி வருகின்றது. சீன மக்களிடம் உள்ள ஒற்றுமை மற்றும் பரஸ்பர உதவி வாய்ந்த எழுச்சி பேரிடர் நிகழ்ந்த பின் புனரமைப்புப் பணியில் வெளிகொணரப்பட்டு வருகின்றது.

2008ம் ஆண்டு மே 12ம் நாள் பிற்பகல் ஏற்பட்ட இயற்கை சீற்ற பேரிடரை மக்கள் அனைவரும் என்றுமே மறந்து விட மாட்டார்கள். இதில் 69 ஆயிரத்து 227 பேர் உயிரிழந்தனர். 17 ஆயிரத்து 923 பேர் காணாமல் போயினர். இந்த இயற்கை பேரிழிவில் மேற்கொள்ளப்பட்ட பேரிடர் நீக்க பணியில் சீனர் அனைவரும் சேர்ந்துள்ளனர்.

திட்டப்படி, பேரிடர் நிகழ்ந்த பின் சுமார் 3 ஆண்டு காலத்தில் செய்யப்படுகின்ற புனரமைப்புப் பணிகளுக்கு, ஒரு இலட்சம் கோடி யுவான் தேவைப்படும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 30 ஆயிரம் கோடி யுவானை மத்திய நிதி துறை வழங்குவது தவிர, சமூக மீட்புதவி, வங்கி கடன், மூலதன சந்தை நிதி திரட்டல், நகர குடிமக்களின் அன்பளிப்பு ஆகிய வழிமுறைகளின் மூலம் ஏனைய உதவித்தொகை திரட்டப்படும். சீனாவின் 19 மாநிலங்களும் மாநகரங்களும் சிச்சுவானில் வீடுகளை கட்டியமைப்பது, அடிப்படை வசதிகளை மீட்பது, பல்வகை நிவாரணப் பொருட்களை வழங்குவது உள்ளிட்ட நிதி திரட்டல் கடமைக்கு தோள் கொடுத்து வருகின்றன.

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் குளிர் காலத்தை கழிக்கின்ற மக்களுக்கு பருத்தி ஆடை பற்றாக்குறை என்ற செய்தியை கேட்ட பின்னர், சீனாவின் பல்வேறு இடங்களின் மக்கள் உடனடியாக அவர்களுக்கென பருத்தி ஆடை மற்றும் போர்வைகளை நண்கொடையாக சேகரித்துள்ளனர். ஹோபேய் மாநிலத்தில் அமைந்துள்ள பருத்தி போர்வை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் பகல் இரவு என்று பாராமல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பருத்தி போர்வைகளை நெய்து வருகின்றனர். தொழிலாளர்கள் தவிர, சாதாரண மக்களும் இந்த உதவி செய்து இப்பணியில் பங்கு எடுக்கின்றனர். சாங்துங் மாநிலத்தின் லேவூ என்னும் ஊரில் வாழ்கின்ற 85 வயதான முதியோர் லியூ யு மேய் இது பற்றி கூறியதாவது.

இப்போது எங்களுக்கு உணவு உடை பிரச்சினை இல்லை. நன்றாக வாழ்கின்றோம். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழ்கின்ற சக முதியோரை மறக்க கூடாது. அவர்களுக்கென நான் பருத்தி ஆடை தைக்கின்றேன் என்று அவர் கூறினார்.

பேரிடருக்குள்ளாக்கப்பட்டுள்ள மக்களும் சக நாட்டவர்களின் முன்னால் இன்னலுக்கு பணியாத வலிமைமிக்க எழுச்சியை காட்டியுள்ளனர். நிவாரண உதவிக்காக காத்திருக்காமல் பல்வகை இன்னல்களை சமாளித்து தாயகத்தை வெகுவாக மீட்க பாடுபட்டு வருகின்றனர். எடுத்துக்காட்டாக நிலையான வீடுகளை கட்டியமைப்பதில் அவர்கள் சொந்த ஆற்றலை சார்ந்திருந்து சுயமாக நிதி முதலீட்டை திரட்டி அனைவரும் இணைந்து வீடுகளை கட்டியமைத்து வருகின்றனர். இப்போது அவர்களில் பெரும்பாலானோர் புதிய வீடுகளில் குடிபெயர்ந்துள்ளனர். மியன் யான் நகரில் வாழ்கின்ற லீ குவெய் குவா என்னும் அம்மையார் அவர்களில் ஒருவராவார்.

நான் வசிக்கின்ற வீட்டின் நில பரப்பு 148 சதுர மீட்டராகும். இதை கட்டியமைப்பதற்கு தேவையான நிதியின் பாதி அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எஞ்சியதை நாங்கள் சமாளித்தோம் என்றார் அவர்.

ஒன்றுபட்டு வலிமையடைவது சீன மக்களின் தேசிய எழுச்சியின் ஒரு பகுதியாகும். இது எதிர்பாராத நிலநடுக்கத்தினால் தூண்டி எழுப்பப்பட்டுள்ளது. அதன் அம்சம் வரலாற்றின் வளர்ச்சியில் செழுமையாகி உயர்ந்துள்ளது.