• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-13 11:00:51    
தொழில்முறை சிரிப்பாளர்

cri
தொழில்முறை சிரிப்பாளர்

சிரித்து வாழ வேண்டும் – பிறர்

சிரிக்க வாழ்ந்திடாதே - என்ற பாடல் உணர்த்தும் உண்மைகளை நிச்சயமாக சிந்திருப்போம். சிரிப்பு இன்று உடல் நலத்தை கொணரும் மருந்தாக உள்ளது. ஆனால் தென்மேற்கு சீனாவில் Chongqing மாநகராட்சியில் உலகில் தனது சிரிப்பை தொழில்முறையாக விற்கும் ஒரே நபர், தான் என்று தன்னைதானே கூறிக்கொள்ளும் 30 வயதான Zheng Yu வாழ்ந்து வருகிறார். இதற்காக அவர் புன்னகை, இளித்தல், முகம் சுளித்தல் போன்ற 12 முகபாவனைகளை மிகவும் சரியாக செய்துகாட்டுகிறார். ஒரு யுவானுக்கு ஒரு முகபாவனை என்றால் மொத்தமாக 10 யுவான் கொடுத்தால் 12 முகபாவனைகளையும் காட்டி அனைவரையும் மகிழ்விக்கின்றார். நாம் அதிகமாக சிரிக்க வேண்டும். சிரிப்பது நமதுடலை நலமாக்குகிறது என்று கூறுகின்ற Zheng Yu சிரிப்பதை பார்க்க பலர் கூடுகின்றனர்.

மில்லியனில் ஒருவர்

அரிதாக நடக்கின்றவைகளுக்கு ஆயிரத்தில் ஒன்று என்று கூற கேட்டிருப்போம். ஜெர்மன் தம்பதியருக்கு பிறந்துள்ள இரட்டை ஆண் குழந்தைகளில் Ryan வெள்ளையாகவும், தம்பி Leo கறுப்பாகவும் பிறந்துள்ளதை மருத்துவர்கள் மில்லியனில் ஒன்று இவ்வாறு நடக்கலாம் என்று கூறியுள்ளனர். அதாவது இரண்டு குழந்தைகளும் வெள்ளையாகவோ அல்லது கறுப்பாகவோ பிறக்க வாய்ப்புண்டு. ஆனால் ஒரு குழந்தை வெள்ளையாகவும் இன்னொன்று கறுப்பாகவும் ஒரே மகப்பேற்றில் பிறப்பது மிகவும் அரிது என்று கூறியுள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த Stephan Gerth ஆப்பிரிக்காவின் கானாவை சேர்ந்த Florence Addo தம்பதியருக்கு இந்த அரிய இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளனர்.

அதேபோல அதிகபட்சமாக ஒரே மகபேற்றில் மூன்று குழந்தைகள் வரை பிறந்துள்ளதை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் எகிப்தின் அலெக்ஸாண்டிரிய கடற்கரை பகுதியில் 27 வயதான பெண்ணொருவர் ஒரே மகபேற்றில் நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் என ஏழு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தெற்கு ஈராக்கிலுள்ள பெண்ணொருவர் Nassiriya விலுள்ள மருத்துவமனையில் ஆறு குழந்தைகளை ஒரே மகபேற்றில் பெற்றெடுத்துள்ளார். அவற்றில் இரு ஆண் மற்றும் இரு பெண் குழந்தைகள் தான் உயிரோடு உள்ளன. வழக்கமாக இரட்டை குழந்தைகள், தங்களுக்கு ஒரே மாதிரியான ஆடை, கவனிப்பு அனைத்தும் ஒரே மாதிரியாக ஒரே அளவாக இருக்க வேண்டுமென அடம்பிடிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியானல் இந்த பெற்றோரின் கதி அதோகதி தான்.