• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-13 09:39:16    
குவெய்யாங் மாவட்டத்தின் பயணம்

cri
குவெய்யாங் மாவட்டத்தின் Xuiwen வட்டத்தை மையப்படுத்தி இன்றைய பயணம் அமைந்தது. காலையில் மிங் அரசரால் நாடு கடத்தப்பட்ட Wang Yang Ming நினைவிடம் சந்தித்தோம். மிங் வம்சஅரசர் காலத்தில் அரசுப் பணி செய்து கொண்டிருந்த அவர் நன்றாக செய்யுள் எழுதும் திறமை கொண்டிருந்தார். தன்னுடன் பணிபுரிந்த 21 பணியாளர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்று அரசருக்கு எதிராக எழுந்தார். எனவே நாடுகடத்தப்பட்ட அவர் இரண்டு ஆண்டுகளாக நடந்து Xuiwen வட்டத்தை வந்தடைந்தார். குகையில் வாழ்ந்து சுய சிந்தனையில் தனது தந்துத்துவத்தை செயல்படுத்த தொடங்கினார். தன்னுடைய தத்துவக் கூடத்தை தொடங்கி அதன் மூலம் பல்வேறு பணிகளை மக்களுக்கு ஆற்ற தொடங்கினார். பல தத்துவக் கூடங்களை நிறுவி மக்களை சிந்திக்க தூண்டினார். தானே படையையும் ஒருங்கிணைத்து அப்பகுதியில் எழுந்த கலகம் ஒன்றை அடக்கும் அளவுக்கு வலிமை பெற்றார்.

தன்னுடைய "இதயமும், செயலும்" என்ற தத்துவத்தை அனைவருக்கும் பரப்ப தொடங்கினார். தற்போது அது தென் கொரியாவிலும், ஜப்பானிலும் அதிகமாக பரவியுள்ளது. அவருடைய நினைவகத்தை புதிப்பித்து அழகுறச் செய்யும் பணி நடைபெறுகிறது. Xuiwen வட்டத்தில் வளர்ந்த இந்த தத்துவத்தை பாதுகாத்து பரவல் செய்யும் பணியாகவே இந்த நினைவு மண்டபத்தை பார்க்க முடிகிறது. இந்த முயற்சி தத்துவயியலி்ல் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி சீன மண்ணின் எழுச்சியை மேம்படுத்தும்.

குவெய்சோ மாநிலத்தில் உள்ள Xiuwen வட்டத்தில் Zhazuo நகரில் தான் கோல்ப் என்ற வளைகம்பி பந்தாட்ட கழகம் அமைந்துள்ளது. அழகை கண்களுக்கு விருந்தாக்கும் மலைக்காட்சி இடங்கள் அருமை. வளைந்து காணப்படும் ஏரியின் அருகில் அதனை நோக்கி அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகள் இயற்கையை கண்டு இன்புற்று மகிழ செய்கின்றன. தென் கொரிய மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் வீரர்கள் கோல்ப் என்ற வளைகம்பி பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ள இங்கு ஆண்டுதோறும் பலமுறை வருமளவுக்கு தலைசிறந்தாக அமைக்கப்பட்டுள்ளது. Xiuwen வட்டத்திற்கு புதிய தோற்றத்தை இது கொடுக்கும். இந்த கோல்ப் என்ற வளைகம்பி பந்தாட்டக் கழக உணவகத்தில் வைத்து Xiuwen வட்டத்தின் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. Shi Hong அவர்களை பேட்டியெடுக்க வாய்ப்பு கிடைத்தது. குவெய்யாங்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இவ்வட்டத்தின் மக்கள் மற்றும் சுற்றுலா நிலைமைகளையும் அவர் விரிவாக எடுத்துக்கூறினார்.

Xiuwen வட்டத்தின் Zazuo நகரில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் இயற்கை தனது அழகின் வெளிப்பாட்டை மிளிர செய்துள்ளது என்று சொல்லலாம். இயற்கையான சூழ்நிலையில் காட்டு மிருகங்களை காப்பது மற்றும் அங்கு வருகின்ற மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை காண முடிந்தது. ஒட்டு மொத்தமாக 5000 மூ பரப்பளவு பகுதியில் அமைந்துள்ள இவ்வுயிரியல் பூங்கா முதல் கட்டமாக தற்போது 3000 மூ பரப்பளவு தான் மக்கள் விலங்குகளை கண்டு களிக்கிறார்கள். அங்கு நிகழ்த்தி காட்டப்படும் யானைகளின் சாகச நிகழ்ச்சி வியப்பை அளிக்கி்ன்றன. யானை நாற்காலியில் அமர்வது, தடியில் நடப்பது, மிதிவண்டி ஓட்டுவது, மூன்று பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து மாலையிட்டு முத்தம் கொடுப்பது, கால்பந்தாட்டம் விளையாடுவது, வளையம் சுற்றுவது ஆகியவற்றை காண ஆயிரம் கண்கள் வேண்டும். யானை என்னை தும்பிக்கையால் தூக்கி எடுத்து சுமந்திருந்தது வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது.

மலைப்பகுதிகளாக இருந்தாலும் மிக சிறந்த அளவில் சாலை வசதிகள் இங்கெல்லம் மேம்பட்டுள்ளன. இயற்கையாக கிடைத்துள்ள கோடைகால வாழிடம் என்ற நிலையை அனுபவிக்க எல்லா மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சுற்றுலா துறையை புதிய கட்டத்திற்கு எடுத்து செல்ல ஐந்தாண்டு திட்டம் வகுத்து செயல்படும் உள்ளூர் அரசின் முயற்சிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.
கூல் (cool) குவெய்யாங் என்பது சுற்றுலாவை மேம்படுத்த பயன்படுத்தப்படும் வெறும் விளம்பர சொல் அல்ல. உண்மை. இதனை அனுபவித்து, அறிந்து, நிறைவாய் செல்லும் பயணமாக உங்கள் குவெய்யாங் சுற்றுலாப் பயணம் அமையும்.