ஐந்து—தீ விழா

தீ விழா, தீயை வழிபடும் விழாவாகும். பண்டைகால மங்கோலிய மக்கள் தீ மீதான வழிபாடினால் இவ்விழா நடத்தப்பட்டது. சந்திர நாட்களின்படி டிசம்பர் திங்களின் 23ம் நாளிரவில் இது நடைபெறுகிறது. வழிபாடு துவங்கும் முன், குடும்பத்தினர் அனைவரும் முற்றத்தின் மையத்தில் நின்று, குடும்பத்தின் மூத்தவர், சாம்பிராணியை ஏற்றி, எண்ணெய், மதுபானம், இறைச்சி முதலிய பொருட்களை தீயில் வைக்கிறார். அவரது தலைமையில், அனைவரும் தீயை நோக்கி வழிபாடு செய்கின்றனர். அடுத்த ஆண்டில் அறுவடை பெற்று, மக்களும் கால்நடைகளும் நலமாக இருந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென அவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
ஆறு—aobao வழிபாடு

aobao வழிபாடு, ஒரு முக்கிய விழாவாகும். Aobao என்றால், ச மன் மதத்தின் கடவுள்கள் வசிக்கின்ற மண் குவியல் அல்லது கல் குவியல் என்பது பொருள். இவ்விழாவில், ஆயர்கள் அணியில் aobaoக்கு சென்று வழிபாடு செய்கின்றனர். மாடு ஆடு அறைச்சிகளையும் பால் உற்பத்திப் பொருட்களையும் aobaoக்கு முன் வைத்து, சாம்பிராணியை ஏற்றி மதத் திருமறை ஓடுகின்றனர். மக்கள், வலது பக்கமாக 3 முறை சுற்றி சென்று கால்நடை வளர்ப்பில் அறுவடை பெற விருப்பம் தெரிவிக்கின்றனர்.
ஏழு—maideer திருவிழா

maideer விழா, mile என்ற புத்த கடவுளை நினைக்கின்ற திருவிழாவாகும். ஜனவரி திங்களின் 15ம் நாளில் ஒவ்வொரு கோயில் mile என்ற புத்த கடவுளின் வருவப்பட்டத்தை மாட்டி, maideer திருவிழாவைக் கொண்டாடுகிறது. கோயிலுக்கு அருகிலான ஆயர்கள் வழிபாடு செய்கின்றனர். வணக்கம் செய்த பின், பிரதேசத்தின் தலைவரின் தலைமையில், அம்பு எய்தல், குதிரைப் போட்டி, மற்போர் முதலிய மங்கோலிய இனத்தின் பாரம்பரிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
|