• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-14 09:54:40    
உலக பனிச்சறுக்கு நடனப் பந்தயம்

cri


7ம் நாளிரவு பெய்சிங்கில் நடைபெற்ற 2008ம் ஆண்டு உலக பனிச்சறுக்கு நடனப் பந்தயத்தின் சீனப் போட்டியில் சீனாவின் Zhang Dan, Zhang Hao இணை, 182.22 புள்ளிகளைப் பெற்று இரட்டையர் பனிச்சறுக்கு நடனத்தின் தங்க பதக்கத்தைப் பெற்றனர்.

சர்வதேச தடகள கூட்டமைப்பு 11ம் நாள் 2008ம் ஆண்டின் தலைசிறந்த தடகள வீரரை தேர்ந்தெடுக்கும் வகையில் போட்டி வரிசையிலுள்ள வீரர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற வீரர்கள் இடம் பெற்றனர். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 100, 200 மீட்டர் ஆடவர் ஓட்டப்போட்டிகள் மற்றும் 400 மீட்டர் ஆடவர் தொடர் ஓட்டப்போட்டி ஆகியவற்றில் தங்க பதக்கங்களை வென்ற Bolt, 110 மீட்டர் ஆடவர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்ற Robles, 5000 மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஆடவர் ஓட்டப்போட்டிகளின் தங்கப் பதக்கங்களைப் பெற்ற எத்தியோபிய வீரர் Bekele ஆகியோர் ஆண்டின் தலைசிறந்த தடகள வீரர்களை தேர்ந்தெடுக்கும் பெயர்ப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

எத்தியோபிய வீராங்கணை Dibaba, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 800 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்ற கென்ய வீராங்கணை Jelimo, புகழ் பெற்ற ரஷிய வீராங்கணை Isinbayeva ஆகியோர் ஆண்டின் தலைசிறந்த தடகள வீராங்கனை தேர்ந்தெடுக்கப்படும் பெயர்ப் பட்டியலில் உள்ளனர்.
Monacoயில் 23ம் நாள் கூடுகின்ற சர்வதேச தடகள கூட்டமைப்பு தலைசிறந்த தடகள வீரர்களை அறிவிக்கும்.

110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் சீனாவில் புகழ் பெற்ற வீரர் லியு சியாங் மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் Sun Haiping அமெரிக்காவிலிருந்து சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஷாங்காய் நகருக்கு திரும்பினர். அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வழங்கிய அறிக்கையின் படி, சீன நிபுணர்களுடன் இணைந்து, லியு சியாங்கிற்கான இறுதி மருத்துவ சிகிச்சை திட்டத்தை முடிவு செய்வார்கள். 
               

முழு உலக பொருளாதார வீழ்ச்சியால், 2010ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகள் பாதிக்கப்படும். கனடா செய்தி ஊடகங்களின் கட்டுரையின் படி, ஒலிம்பிக் கிராமத்துக்கு வங்குவா நகர அரசு உதவியை வழங்கியுள்ளது. நிதி குறைவாக உள்ள ஒலிம்பிக் கிரமத்துக்கு 8 கோடியே 40 இலட்சம் அமெரிக்க டாலர் கடனை வழங்க வங்குவா நகர அரசு இணங்கியுள்ளது என்று அறியப்படுகின்றது.
2010ம் ஆண்டு வங்குவா குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஒலிம்பிக் கிரமம் 2800 வீரர்களையும் அதிகாரிகளையும் வரவேற்றும்.