மூன்று ஆண்டுகளுக்கு முன், Fan Zhiqi என்பவர் மறுபடியும் தொழில் நடத்தி, ZHONG YUAN DING SHENG என்ற நிறுவனத்தை உருவாக்கினார். உற்சாகம் மற்றும் மன உறுதியோடு, அவரது நிறுவனத்தின் மூலதனச் சேமிப்பு உயர் வேகத்தில் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அறிவியல் தொழில் நுட்பச் சந்தையிலும் அவரது நிறுவனம் விரைவாக பெரும் பங்கெடுத்துள்ளது.
மூன்று வயதில் துவக்கப் பள்ளியில் நுழைந்தது முதல், ஒரே வயதளவிலான பெண் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், Fan Zhiqi மேலதிக அனுபவங்களைப் பெற்றுள்ளார். 19 வயதில், மற்றவர்கள் பல்கலைக்கழகத்தில் நுழைந்த போது, அவர் பல்கலைக்கழகத்திலிருந்து படிப்பை முடித்து, SHAN TOU சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குச் சென்றார். முதலில் சுற்றுலா நிறுவனம் ஒன்றில் அவர் வழிகாட்டியாக வேலை செய்தார். ஆனால், சில நாட்களுக்குப் பின், அவரது பார்வையில் சவாலையும் ஊக்கத்தையும் ஏற்படுத்த முடியாத அந்த வேலையிலிருந்து விலகி, வீடு மற்றும் நில உடைமை நிறுவனம் ஒன்றில் நுழைந்து, பொது மேலாளரின் செயலாளராக பணிபுரிந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் தனது முதலாவது நிறுவனத்தை அவர் உருவாக்கினார். அப்போதைய அவரது லட்சியம் தடையின்றி வளர்ந்து வந்தது. SHAN TOU நகரின் வீடு மற்றும் நில உடைமைத் துறையில், இளமையும் அழகும் நிறைந்த Fan Zhiqi, புகழ்பெற்றவராக இருந்தார். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பின், Fan Zhiqi முதல் முறையாக தோல்வி அடைந்தார். அவரது நிறுவனம் திவாலானது. அவர் உளச்சோர்வு நோயினால் பாதிக்கப்பட்டார்.
2002ஆம் ஆண்டில் பணம் இல்லாத Fan Zhiqi SHAN TOU நகரை விட்டு, பெய்ஜிங்கில் வாழும் பெற்றோரின் வீட்டுக்குத் திரும்பினார். தொடர்ந்து கல்வி பயில்வது அவரது முதலாவது தெரிவு. Peking பல்கலைக்கழகம், Ren Min பல்கலைக்கழகம் மற்றும் Tsing Hua பல்கலைக்கழகத்தில் அவர் முறையே கல்வி பயின்றார். அத்துடன் வாழ்க்கை பற்றியும் அவர் சிந்தித்தார். இந்த முறை, புதிய பாதையில் Fan Zhiqi நிதானமாகவும் உறுதியாகவும் அடி எடுத்து வைத்தார்.
ZHONG YUAN DING SHENG நிறுவனத்தை உருவாக்கிய போக்கில், அவர் சில தடங்கல்களைச் சந்தித்தார். முதலாவது வாடிக்கையாளரைப் பெற அவர் ஒன்றரை ஆண்டு முயற்சி மேற்கொண்டார். இலட்சியத்தின் உச்சியிலிருந்து கீழே தரையில் வீழ்ந்த Fan Zhiqi, தனது உறுதியான நம்பிக்கையோடு, மீண்டும் புதிய துறையை உருவாக்கினார். மேலும், ZHONG YUAN DING SHENG நிறுவனம் நிறுவப்பட்ட நாளிலிருந்து, அவர் ஒத்துழைப்பாளருடன் விவாதித்து ஒரு சிறப்பு உடன்படிக்கையை உருவாக்கினார். அதாவது, ஒவ்வொரு ஆண்டுக்கான வர்த்தகத் தொகையின் 10 விழுக்காடு அறத் துறைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். வியாபாரம் செய்வதோடு அறத் துறையிலும் ஈடுபடுவது என்பது, Fan Zhiqi நடத்த விரும்பும் நேர்த்தியான வாழ்க்கையாகும்.
|