சீன அரசுத் தலைவர் ஹூ ச்சிந் தாவ், 14ம் நாள் பிற்பகல் சிறப்பு விமானம் மூலம், பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, வாஷிங்டன் நகருக்குச் சென்றார். அங்கு நடைபெறவுள்ள 20 நாடுகள் குழுவின் நாணய சந்தை மற்றும் உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்.
ஹூ ச்சின் தாவின் பயணத்தின் முதல் இடம், வாஷிங்டன் ஆகும். 2 வாரம் நீடிக்கும் இப்பயணத்தில், பெரு தலைநகர் லிமாவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் நிலை 16வது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்திலும் கலந்துகொள்வார். கொஸ்டே ரிக்கா, கியூபா, பெரு, கிரேக்கம் ஆகிய நாடுகளில் அரசு முறை பயணங்களையும் அவர் மேற்கொள்வார்.
|