• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-15 19:29:00    
நிதி உச்சி மாநாட்டுக்கான விருப்பம்

cri

நிதிச் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரம் பற்றிய 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு பற்றி, சில நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் உரைநிகழ்த்திய போது, நிதி நெருக்கடியை சமாளித்து, நேர்மையான நியாயமான சர்வதேச நிதி அமைப்பு முறையை உருவாக்குவதற்கு பங்காற்ற, இவ்வுச்சி மாநாடு சாதனைகள் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.

வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு, குறிப்பாக ஐ.நாவின் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி குறிகோளின் நடைமுறையாக்கத்தில் நிதி நெருக்கடியின் பாதிப்பை இயன்ற அளவில் தடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

சர்வதேச நிதி அமைப்பு முறையையும் சர்வதேச முக்கிய நிதி நிறுவனங்களையும் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும் என்று ரஷிய அரசுத் தலைவர் Dmitry Medvedev கூறினார்.

உலகில் புதிய நிதி ஒழுங்கிற்கான நெறிவரைபடத் திட்டம் இவ்வுச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று ஜெர்மன் தலைமை அமைச்சர் Angela Merkel அம்மையார் விருப்பம் தெரிவித்தார்.

தவிர, தற்போதைய நிதி நெருக்கடியை சமாளிப்பது என்பது இவ்வுச்சி மாநாட்டின் நோக்கமாகும். அத்துடன். இனிமேல் நிதி அமைப்பு முறையை சீர்த்திரத்தம் செய்வதற்கும் இது அடிப்படையிடும் என்று உபசரிப்பு நாடான அமெரிக்க அரசுத் தலைவர் ஜார்சி W புஷ் கூறினார்.