ஹுசிந்தாவ்-திமித்ரி மெத்வதேவ் சந்திப்பு
cri
சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் 15ம் நாள் வாஷிங்டனில் ரஷிய அரசுத் தலைவர் திமித்ரி மெத்வதேவைச் சந்தித்துரையாடினார். சீன-ரஷிய உத்திநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவை ஹுசிந்தாவ் ஆக்கப்பூர்வமாக பாராட்டினார். தற்போது, சீன-ரஷிய உறவின் வளர்ச்சிப் போக்கு சீராக இருக்கின்றது. புதிய வளர்ச்சி, தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கிறது. இரு நாட்டு அரசியலில் பரஸ்பர நம்பிக்கை தொடர்ந்து வலுப்பட்டு வருகின்றது என்று ஹுசிந்தாவ் தெரிவித்தார். அடுத்த ஆண்டு, சீனாவும் ரஷியாவும் தூதாண்மை உறவை நிறுவிய 60வது ஆண்டு நிறைவாகும். அடுத்த ஆண்டில், சீனாவில் ரஷிய ஆண்டு என்ற நடவடிக்கையை சீனா நடத்தும் என்று ஹுசிந்தாவ் கூறினார். சீனாவும் ரஷியாவும், இந்த வாய்ப்பை இறுகப்பற்ற வேண்டும். இரு தரப்பும் எட்டிய பல்வேறு உடன்பாடுகளையும் ஒத்த கருத்துக்களையும் பன்முகங்களிலும் செயல்படுத்தி, பயன் தரும் ஒத்துழைப்பை முன்னேற்றி, சர்வதேச மற்றும் பிரதேச விவகாரகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று ஹுசிந்தாவ் கூறினார்.
|
|