• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-16 19:06:57    
அரசுத் தலைவர் ஹு சிந்தாவின் வேண்டுகோள்

cri
நிதி சந்தை மற்றும் உலகப் பொருளாதாரம் பற்றிய 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு 15ம் நாள் வாஷிங்டனில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் இதில் உரை நிகழ்த்தி, சர்வதேசச் சமூகம் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நிதி நெருக்கடியைப் பயன் தரும் முறையில் சமாளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இன்றியமையாத நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு, நிதிச் சந்தை மீதான நம்பிக்கையை மீட்டு, நிதி நெருக்கடியின் பரவலைத் தடுப்பது என்பது தற்போது சர்வதேச சமூகம் உடனடியாக செய்ய வேண்டிய கடமையாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச சந்தையை நிதானப்படுத்தி, பல்வேறு வடிவங்களிலான வர்த்தக மற்றும் முதலீட்டுப் பாதுகாப்பு வாதத்தை பல்வேறு நாடுகள் எதிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார். நிதி நெருக்கடி, வளரும் நாடுகளுக்குக் குறிப்பாக மிக வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு ஏற்படுத்திய பாதிப்பி்ல் கவனம் செலுத்தி கூடிய அளவில் பாதிப்பைக் குறைக்க வேண்டும் என்று அவர் கூறினார். சர்வதேச நிதி நிதானத்தைப் பேணிக்காத்து, உலகப் பொருளாதாரத்தை விரைவுப்படுத்தும் சர்வதேச ஒத்துழைப்பில் சீனா பொறுப்பேற்கும் மனப்பாங்குடன் தொடர்ந்து பங்கேற்கும். சர்வதேச நிதி அமைப்புகள் நிதி சந்தையின் மாற்றத்துக்கிணங்க நிதி திரட்டல் ஆற்றலை வலுப்படுத்துவதற்கும், நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வளரும் நாடுகளுக்கான ஆதரவை அதிகரிப்பதற்கும் சீனா ஆதரவளிக்கின்றது என்று ஹு சிந்தாவ் தமது உரையில் தெரிவித்தார். உலக வங்கியின் சர்வதேச நிதி நிறுவன வர்த்தக நிதி திரட்டல் திட்டத்தில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொள்ள சீனா விரும்புகின்றது என்று அவர் வாக்குறுதி அளித்தார்.