• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-16 19:50:06    
20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு

cri
நிதி சந்தை, உலகப் பொருளாதாரம் ஆகியவை பற்றிய 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு உள்ளூர் நேரப்படி 15ம் நாள் வாஷிங்டனில் நிறைவடைந்தது. சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிப்பது, சர்வதேச நிதி மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறையைச் சீர்திருத்தம் செய்வது ஆகிய தற்போது மிக அதிக மக்களின் கவனத்தை ஈர்க்கும் பிரச்சினைகள் குறித்து, மாநாட்டில் கலந்துகொண்டோர் கூட்டாக விவாதித்து, கருத்தொற்றுமைகளை உருவாக்கினர்.
நிதி பிரச்சினை பற்றிய 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு அமெரிக்கத் தேசியக் கட்டிட அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இக்குழுவைச் சேர்ந்த உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் தலைவர்கள், ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கிமூன், உலக வங்கி,சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். முழு மூச்சுடன் ஒத்துழைத்து இன்னல்களைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என்ற தலைப்பில் சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் மாநாட்டில் உரை நிகழ்த்தினார். சர்வதேச சமூகம் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, பயன் தரும் முறையில் நெருக்கடியைச் சமாளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். சர்வதேச நிதி அமைப்புமுறையைச் சீர்திருத்தம் செய்வது பற்றிய சீனாவின் 4 கோட்பாடுகளை அவர் விளக்கி, உலக நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் சீனாவின் நிலைப்பாட்டையும் தெரிவித்தார்.
பொருளாதாரத்தின் அதிகரிப்பை நிலைநிறுத்துவது நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கான முக்கிய அடிப்படையாகும். பல்வேறு நாடுகள் ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கொள்கைகளைச் சரிப்படுத்தி, இன்றியமையாத நிதி மற்றும் நாணய சீரமைப்பு வழிமுறைகள் மூலம், பொருளாதாரத்தி்ன் அதிகரிப்பை ஆக்கப்பூர்வமாக விரைவுப்படுத்தி, உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும் என்று ஹு சிந்தாவ் வலியுறுத்தினார். சர்வதேச எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் சந்தையை நிதானப்படுத்த பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு, கள்ள செயல்களை ஒடுக்கி, உலகப் பொருளாதாத்தின் வளர்ச்சிக்கு சீரான நிபந்தனைகளை உருவாக்க வேண்டும். சர்வதேசச் சமூகம் பல்வேறு வடிவங்களிலான வர்த்தக மற்றும் முதலீட்டுப் பாதுகாப்பு வாதங்களை தடுத்து, தோஹா சுற்று பேச்சுவார்த்தை கூடிய விரைவில் ஆக்கப்பூர்வ முன்னேற்றம் பெற செய்ய வேண்டும் என்று ஹு சிந்தாவ் கூறினார்.
நியாயம், நேர்மை. பன்மைத்தன்மை, ஒழுங்கு ஆகியவை சர்வதேச நிதி ஒழுங்கு வளரும் புதிய திசைகளாகும் என்று அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் வலியுறுத்தினார். பன்னோக்கு, சம நிலை, படிப்படியான வளர்ச்சி, பயன் தரும் தன்மை ஆகிய 4 கோட்பாடுகளின் படி சர்வதேச நிதி அமைப்புமுறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். உலகில் மிகப் பெரிய வளரும் நாடான சீனாவின் அரசுத் தலைவரான அவர், தற்போது மிகப்பல வளரும் நாடுகளில் நிதி நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பை குறிப்பாக வெளிப்படுத்தினார். சர்வதேச நிதி நிதானத்தைப் பேணிக்காத்து, உலகப் பொருளாதாரத்தை விரைவுப்படுத்தும் சர்வதேச ஒத்துழைப்பில் சீனா பொறுப்பேற்கும் மனப்பாங்குடன் தொடர்ந்து பங்கேற்கும். சர்வதேச நிதி அமைப்புகள் நிதி சந்தையின் மாற்றத்துக்கிணங்க நிதி திரட்டல் ஆற்றலை வலுப்படுத்துவதற்கும், நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வளரும் நாடுகளுக்கான ஆதரவை அதிகரிப்பதற்கும் சீனா ஆதரவளிக்கும் என்று ஹு சிந்தாவ் தமது உரையில் தெரிவித்தார். உலக வங்கியின் சர்வதேச நிதி நிறுவன வர்த்தக நிதி திரட்டல் திட்டத்தில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொள்ள சீனா விரும்புகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது முழு உலகமும் எதிர்நோக்கும் நிதி மற்றும் பொருளாதாரப் பிரச்சினையைச் சமாளிக்கும் நடவடிக்கை பற்றி பல்வேறு தரப்புகள் செயல்பாட்டுத் திட்டத்தை உருவாக்கி, நீண்டகால மற்றும் குறுகிய கால இலக்கை வகுத்தன. மாநாட்டில் வாஷிங்டன் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போதைய சர்வதேச நிதி நெருக்கடியில், ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலகப் பொருளாதாரத்தின் அதிகரிப்பை மீட்கப் பாடுபட்டு, சர்வதேச நிதி அமைப்புமுறையில் தேவையான சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதில் 20 நாடுகள் குழுவின் தலைவர்கள் மனவுறுதியை தெரிவித்தனர். சர்வதேசச் சமூகம் தொடர்ச்சியான கூட்டாளி உறவு, ஒத்துழைப்பு மற்றும் பலத் தரப்பு வாதம் மூலம், அறைகூவல்களை சமாளித்து, உலகப் பொருளாதாரத்தின் நிதானத்தையும் செழுமையையும் மீட்பது உறுதி.
பல்வேறு தரப்புகள் உருவாக்கிய உடன்படிக்கையின் படி, வாஷிங்டன் அறிக்கையின் நடைமுறையாக்க நிலைமையை பரிசீலிக்க அடுத்த ஆண்டு ஏப்ரல் திங்கள் 30ம் நாள் 20 நாடுகள் குழு மீண்டும் உச்சி மாநாட்டை நடத்தும் என்று தெரிய வருகின்றது.