கோஸ்டாரிக்க அரசுத்தலைவர் Oscar Arias Sanchez இன் அழைப்புக்கு ஏற்ப, சீன அரசுத்தலைவர் ஹுசிந்தாவ், உள்ளூர் நேரப் படி, 16ம் நாள் பிற்பகல் கோஸ்டாரிக்காவின் தலைநகர் San Jose ஐ சென்றடைந்து, அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கினார். சீன அரசுத் தலைவர், மத்திய அமெரிக்காவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
விமான நிலையத்தில் எழுத்து மூல உரை ஹுசிந்தாவ் நிகழ்த்துகையில், கோஸ்டாரிக்கா மத்திய அமெரிக்காவின் முக்கிய நாடாகும். மத்திய அமெரிக்க பிரதேசத்திலான சீனாவின் முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளியாகவும் அது திகழ்கின்றது என்று கூறினார்.
நேற்று நண்பகல் அவர் வாஷிங்டனை விட்டு, கோஸ்டாரிக்காவுக்குச் சென்று பயணத்தை மேற்கொண்டார்.
வாஷிங்டனில், 20 நாடுகள் குழுவின் நிதிச் சந்தை மற்றும் உலகப் பொருளாதார உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் தனித்தனியாக, பிரேசில் அரசுத்தலைவர் Luis Inacio Lula Da Silva, பிரிட்டிஸ் தலைமையமைச்சர் Gordon Brown, ரஷிய அரசுத்தலைவர் Dmitri Medvechev, ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் Kevin Rudd ஆகியோருடன் அவர் தனித்தனியாகச் சந்தித்து உரையாடினார்.
|