• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-17 10:28:32    
சர்வதேச சதுரங்க ஒலிம்பிக் குழுப் போட்டி

cri
சீனச் சர்வதேச சதுரங்க குழு 11ம் நாள் ஜெர்மனியின் Dresden நகருக்கு சென்று, 12ம் நாள் துவங்கும் 38வது சர்வதேச சதுரங்க ஒலிம்பிக் குழு போட்டியில் கலந்துகொண்டது. சீன சர்வதேச சதுரங்க சங்கத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.
தலைமை பயிற்சியாளர் Ye Jiangchuan தலைமையிலான சீன அணியில், Wang Yue, Pu Xiangzhi, Ni Hua, Wang Hao, Li Chao, Hou Yifan, Zhao Xue, Shen Yang, Ju Wenjun, TanZhongyi ஆகியோர் இடம் பெற்றனர்.

உலகின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த 152 அணிகள் 38வது சர்வதேச சதுரங்க ஒலிம்பிக் குழு போட்டியில் கலந்துகொண்டுள்ளன. வரலாறு கண்டிராத அளவிலான மிக பெரிய போட்டி இதுவாகும்.
2008ம் ஆண்டு தொழில்முறை ஆடவர் டென்னிஸ் சங்கத்தின் இறுதிப்போட்டி 8ம் நாள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. ஷாங்காய் இப்போட்டியை நடத்துவது இதுவே இறுதி முறையாகும்.
ஸ்விட்சர்லாந்தின் வீரர் Federer, செர்பிய வீரர் Djokovic, பிரிட்டன் வீரர் Murray, ரஷிய வீரர் Davydenko, அமெரிக்க வீரர் Roddick, அர்ஜென்டீன வீரர் Del Potro, பிரான்ஸ் வீரர் Tsonga,

அவரது சக நாட்டவர் Simon ஆகிய 8 வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். உடல் நல குறைவால், உலக தரவரிசையில் முதல் இடத்தை பெற்றிருக்கும் ஸ்பானிய வீரர் Nadal இப்போட்டியிலிருந்து விலகினார். Nadalக்கு பதிலாக Simon இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.
ஆடவர் தொழில் முறை டென்னிஸின் அதிவுயர் போட்டி மாஸ்டர் கோப்பையாகும். முழு ஆண்டிலும், தலைசிறந்த சாதனையை பெற்ற 8 வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்வார்கள். இதில் தேர்வு போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் இடம் பெறுகின்றன. இப்போட்டி நவம்பர் 16ம் நாள் நிறைவடையும்.
2009ம் ஆண்டு தொழில் முறை ஆடவர் டென்னிஸ் சங்கத்தின் இறுதிப்போட்டி இலண்டனில் நடைபெறும்.

2008ம் ஆண்டு சீனத் தேசியப் பொது மக்கள் மலை ஏறுதல் மாநாடு மற்றும் 4வது சீன ஹாங் சாங் சர்வதேச மலை ஏறுதல் மாநாடு 8ம் நாள் சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஹாங் சாங் மலை இயற்கை காட்சி மண்டலத்தில் நடைபெற்றது. அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நைஜீரியா, தென் கொரியா முதலிய 28 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த வெளிநாட்டு வீரர்களும் மலை ஏறும் சீன வல்லுனர்களும் இந்நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.
பொது மக்கள் கட்டுக் கோப்பாக உடலை வைத்திருப்பது என்பது 2008ம் ஆண்டு சீனத் தேசியப் பொது மக்கள் மலை ஏறுதல் மாநாட்டின் தலைப்பாகும். இந்நடவடிக்கை 18ம் நாள் சீனாவின் ச்சியங் ச்சி மாநிலத்தின் Zi Xi மாவட்டத்தின் Da Jue சாங் இயற்கை காட்சி மண்டலத்தில் நிறைவடையும்.