• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-17 18:10:23    
20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு

cri

உலகின் கவனத்தை ஈர்த்த 20 நாடுகள் குழுவின் நிதிச் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரம் பற்றிய உச்சி மாநாடு கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் நிறைவடைந்தது. சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் தலைசிறந்த திட்டத்தை வகுக்கவில்லை என்ற போதிலும், இம்மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு தரப்புகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை, தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்கும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று சீனப் பொருளியலாளர்கள் கருத்து தெரிவித்தனர். அத்துடன், சர்வதேச நிதி அமைப்புமுறையை சீர்திருத்தம் செய்யும் கோட்பாடுகளில், கருத்தொற்றுமை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் உலகப் பொருளாதார அதிகரிப்பின் வீழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்கும் வகையில், ஒட்டுமொத்த பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அடிப்படையில் மேலும் பரந்தளவில் கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வுச்சி மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் தலைவர்கள் இக்கருத்தை ஒருமனதாக தெரிவித்தனர். பொருளாதார அதிகரிப்பை நிலைநிறுத்தி, நிதானத்தை பேணிக்காக்க, பல்வேறு நாடுகள் இன்றியமையாத நிதி மற்றும் நாணயக் கொள்கையை மேற்கொள்வதோடு, சர்வதேச நிதி அமைப்புமுறைச் சீர்திருத்தம் பற்றிய 5 கோட்பாடுகளை உருவாக்க வேண்டும் என்று மாநாடு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், திட்டவட்டமான நடவடிக்கைகள், அடுத்த ஆண்டின் மார்ச் திங்கள் இறுதிக்குள் மேலும் விபரமாக மேற்கொள்ளப்படும் என்று தெரிய வருகிறது.

மக்கள் அனைவரும் இவ்வுச்சி மாநாடு குறித்து பல எதிர்பார்ப்புகளைக் கொண்டி இருந்த போதிலும், உலக நிதி நெருக்கடியை ஒரு நாளுக்குள் தீர்க்க முடியாது. தொடர்புடைய திட்டவட்டமான நடவடிக்ககள் பற்றி மாநாட்டுக்கு பின் மேலும் கலந்தாய் செய்யப்படும். இவ்வுச்சி மாநாட்டின் மிகப் பெரும் பங்கு, பல்வேறு தரப்புகளின் நம்பிக்கையை அது அதிகரித்துள்ளதே என்று ஃபூதான் பல்கலைக்கழகத்தின் சீனப் பொருளாதார ஆய்வுப் பிரிவின் தலைவர் சாங்ஜுன் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது

மாநாட்டிலிருந்து கிடைத்த மிக முக்கிய தகவல், நம்பிக்கையாகும். 20 நாடுகள் குழு ஒன்றிணைந்து செயல்பட்டு, நவவடிக்கைத் திட்டத்தை வகுப்பதன் நோக்கம், நிதி நெருக்கடி மேலும் தீவரமாகாமல் தடுத்து, குறிப்பாக வங்கித்துறை மற்றும் பங்குச்சந்தை சாராத பொருளாதாரத்திலான வீழ்ச்சியை தளர்த்துவதோயாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது, பொருளாதார அதிகரிப்பை நிலைநிறுத்த வளர்ந்த நாடுகள் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை, வட்டியைக் குறைப்பது முதலிய நிதிக் கொள்கையாகும். பொருளாதார அதிகரிப்பை ஊக்கப்படுத்த,பல்வேறு நாடுகள் இன்றியமையாத நிதிக் கொள்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடு தெளிவாக முன்வைத்தது. இவ்வுச்சி மாநாடு நடைபெறுவதற்கு முன், மொத்தம் 4லட்சம் கோடி யுவான் மதிப்புள்ள பொருளாதார ஊக்கப்படுத்தல் திட்டத்தை சீன அரசு வெளியிட்டது. இது, உலகளவில் ஆக்கப்பூர்வமான வரவேற்பை பெற்றது. பல்வேறு நாடுகளுக்கு, சீனாவின் நடவடிக்கை கற்றுக் கொண்டு மிகவும் பயன்படுத்தக் கூடியது என்று சாங் ஜுன் தெரிவித்தார். இது பற்றி, அவர் மேலும் கூறியதாவது

சீனாவின் இத்திட்டம், உச்சி மாநாட்டில் ரகசிய முறையில் விவாதிக்கப்பட்ட முக்கிய கருப்பொருளாகும். இது, உலகப் பொருளாதாரத்துக்கு ஒரு ஆக்கப்பூர்வ செல்வாக்கை ஏற்படுத்தும் என்றார் அவர்.

தவிர, இம்மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சர்வதேச நிதி அமைப்புமுறைச் சீர்திருத்தம் பற்றி கோட்பாட்டு ரீதியிலான சில கருத்தொற்றுமைகளை உருவாக்கினர். இக்கோட்பாடுகளுக்கிணங்க, சர்வதேச நிதி நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும். இது, மேலதிக புதிய பொருளாதாரச் சமூக உறுப்பு நாடுகளைச் சேர்க்கும். சீனா, பிரேசில், இந்தியா போன்ற புதிதாக வளரும் வல்லரசு நாடுகள் சர்வதேச நிதி அமைப்புமுறையில் மேலும் பெரும் பங்காற்றும். உலகளவிலான நிதி கண்காணிப்பு அமைப்புமுறையும் கணக்காளர் விதிமுறையும் சீர்திருத்தம் செய்யப்படும். உலகில் பெரிய ரக நிதி நிறுவனங்களைக் கண்கானித்துக் கட்டுப்படுத்தும் வகையில், 20 நாடுகள் குழு கண்காணிப்பு அமைப்பை நிறுவும் என்பது குறிப்பிடத் தக்கது.

உலகப் பொருளாதாரத்தின் மீட்புக்கு சீனா ஆக்கப்பூர்வமாக பங்கு ஆற்ற வேணேடும். அத்துடன், தனது பங்குக்கு சமமான கருத்துரிமையை சீனா பெற வேண்டும் என்று J.P.மார்கன் சேஸ் தொழில் நிறுவனத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிரதேசத்தின் முதன்மை பொருளியலாளர் கோங ஃபாங்சியுங் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

சீனா முன்முயற்சியுடன் பங்கெடுக்கும் அதே வேளையில், தனது தகுதியையும் உரிமையையும் பெற ஆக்கப்பூர்வமாக முயற்சிக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

தவிர, சீனா, பிரேசில், இந்தியா முதலிய புதிதாக வளரும் வல்லரசு நாடுகள் 20நாடுகள் குழுவில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன. சர்வதேச நிதி அமைப்புமுறைச் சீர்திருத்த முன்னேற்றப் போக்கிலும் அவை ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் உலகப் பொருளாதார ஆற்றலின் கட்டமைப்பில், தெளிவான மாற்றம் காணப்பட்டுள்ளதை, இது காட்டுகிறது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.