குழந்தைகளுக்கு ஒரு நலவாழ்விடம் கட்ட சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம் 3 கோடி யுவானை ஒதுக்கீடு செய்யும் என்று 17ம் நாள் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பொதுத் துறை ஆணையம் தெரிவித்தது.
இந்த நலவாழ்விடம், 2010ம் ஆண்டு பயன்படுத்தப்படும். அதில் 300 குழந்தைகளை பராமரிக்க முடியும். அனாதைக் குழந்தைகளுக்கும் உடல் திறன் சவால் கொண்ட குழந்தைகளுக்கும், சீரான வாழ்க்கை சுற்றுச்சூழலையும், கல்வி மற்றும் குணமடையச் செய்வது உள்ளிட்ட பல்வகை வசதிகளையும் இந்த குழந்தை நலவாழ்விடம் வழங்கும்.
தற்போது திபெதிலுள்ள குழந்தை நலவாழ்விடங்கள், 900 அனாதைத் குழந்தைகளையும் உடல் திறன் சவால் கொண்ட குழந்தைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளன.
|