சீன அரசுத் தலைவர் ஹூ சிந்தாவ், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் 16வது ஆதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, இலத்தின் அமெரிக்காவின் 3 நாடுகளில் பயணம் மேற்கொள்வார். இது, சீன-இலத்தின் அமெரிக்க பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சீன-இலத்தின் அமெரிக்க உறவு புதிய கட்டத்தில் நுழைவதை முன்னேற்றும் என்று ஐ.நாவின் இலத்தின் அமெரிக்கா மற்றும் Caribbean பொருளாதாரக் கமிட்டியின் சர்வதேச வர்த்தக ஒருங்கிணைப்பு பிரிவுத் தலைவர் Osvaldo Rosales கூறினார். சீன செய்தியாளருக்கு சிறப்பு பேட்டியளித்த போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது, சீனா, கோஸ்டாரிக்காவுடன், தாராள வர்த்தக உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கான செயல்பாட்டு முறையை ஆக்கப்பூர்வமாக விவாதித்துக் கொண்டிருக்கிறது. சீனா, பெருவுடனான தாராள உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தை, தங்குதடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவை எல்லாம், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கட்டுக்கோப்புக்குள், சீனாவும் இலத்தின் அமெரிக்க நாடுகளும், ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதைக் காட்டியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
|