• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-18 14:43:55    

சிங் மிங் யுவான்


cri

ச்சிங் வம்சக்காலத்தின் பழங்கால கட்டிடமான சிங் மிங் யுவான், இன்று பெய்ஜிங் தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்ததாகும். அது, பெய்ஜிங் மாநகரின் வடமேற்கிலுள்ள ஹெய் தியன் பிரதேசத்தின் யி ஹெ யுவானின் குவுன் மிங் ஏரியின் மேற்கு கரையில் இருக்கிறது. அதன் மொத்த பரப்பளவு, 75 ஹெக்டராகும். இதில், நீரின் பரப்பளவு, 13 ஹெக்டராகும். இது, புகழ்பெற்ற மூன்று மலை மற்றும் ஐந்து பூங்காக்களில் ஒன்றாகும்.

சின் வம்சக்காலத்தில், அங்கு ஃபூ ழோங் மண்டபம் கட்டியமைக்கப்பட்டது. 1506 முதல் 1521ம் ஆண்டு வரை, ஹுவா யன் கோயில் கட்டியமைக்கப்பட்டது. 1680ம் ஆண்டு, ச்சேங் சின் யுவான் கட்டியமைக்கப்பட்டது. 1692ம் ஆண்டு முதல், இது, சிங் மிங் யுவான் என்று மாற்றப்பட்டு அழைக்கப்படத் துவங்கியது.

சிங் வம்சக்காலத்தில் ச்சியன் லோங் பேரரசர் ஆட்சிபுரிந்த காலத்தில், அது விரிவாக்கப்பட்டது. அப்போது, சிங் மிங் யுவான் 16 காட்சிகள் உருவாகின. அக்காலம், சிங் மிங் யுவானின் மிக வளர்ச்சியடைந்த காலமாகும்.

1860ம் ஆண்டு, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் கூட்டுப் படைகளாளும், 1900ம் ஆண்டு எட்டு ஏகாதிப்பதிய நாடுகளின் படைகளாலும் இது சீர்குலைக்கப்பட்டது.

1949ம் ஆண்டுக்குப் பின், அது சீன அரசால் பயன்படுத்தப்பட்டு, பெருமளவில் செப்பனிடப்பட்டு, பசுமைமயமாக்கப்பட்டது.

இங்கு அதிகமான காட்சிகள் காணப்படுகின்றன. இவற்றில், சில காட்சிகள், மிகவும் புகழ்பெற்றவை. எடுத்துக்காட்டாக, யுச்சுவான் ஊற்று, பேரரசர் ச்சின் லோங்கால் உலகில் முதலில் ஊற்று என அழைக்கப்பட்டது. அது, சின் வம்சக்காலத்திலுள்ள எட்டு புகழ்பெற்ற காட்சிகளில் ஒன்றாகும். யுஃபேங் கோபுரம், யுச்சுவான் மலையின் முக்கிய மலை முகட்டில் இருக்கிறது. அதன் உயரம், 47.4 மீட்டராகும். ஹுவா ச்சாங் கோபுரம், வெள்ளிக் கற்களால் அமைக்கப்பட்ட ஒரு கோபுரமாகும். லேங்சியா குகையில், ச்சிங் வம்சக்காலத்தின் சிலைகள் காணப்படுகின்றன. அவை, மிக உயர்வான கலை மதிப்புடையவை.

2006ம் ஆண்டு மே 25ம் நாள், ச்சிங் வம்சக்காலத்திலான பழங்கால கட்டிடமான சிங் மிங் யுவான், சீன அரசவையால், முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 6வது தொகுதி தொல்பொருள் பாதுகாப்புப் பட்டியளில் சேர்க்கப்பட்டது.