• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-18 09:35:02    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை:  எமது நிகழ்ச்சிகளை பற்றிய உங்களது எண்ணங்களை வானலையில் நீந்தச் செய்யும் நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த நிகழ்ச்சியின் மூலம் வாரந்தோறும் உங்களை சந்திப்பதில் நானும், க்ளீட்டசும் மகிழ்ச்சியடைகிறோம்.
க்ளீட்டஸ்: அன்பு நேயர்களே, நிகழ்ச்சிகளை செவி மடுத்து, கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் நீங்கள் அனுப்பும் கருத்துக்களே எங்கள் பணிக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து வருகின்றன. எனவே, தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேட்டு கடிதங்களையும், மின்னஞ்சல்களையும் அனுப்பிவரும் அன்புள்ளங்களுக்கு எமது உளமார்ந்த நன்றிகள்.
கடிதப்பகுதி
கலை: அழகான குவாங்சி பற்றிய கட்டுரைகள் குறித்து பெரியகாலாப்பட்டு பெ. சந்திரசேகரன் எழுதிய கடிதம். அழகான குவாங்சி பொது அறிவுப்போட்டிக்கான கட்டுரைகள் நான்கும், குவாங்சியை அருமையாக விளக்கி, ரசனையை தூண்டின. குவாங்சியின் வரலாறு, இயற்கைக் காட்சிகள், மக்களின் நடையுடை பாவனை, வாழ்க்கை ஆகியவை பற்றி தகவல்களை கேட்டபோது, குவாங்சியின் அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.
க்ளீட்டஸ்: இலங்கை, புதிய காத்தான்குடியை சேர்ந்த ரம்ஸியா எழுதிய கடிதம். தமிழ்ப்பிரிவின் புதிய நேயராக தம்மை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி கூறியுள்ள ரம்ஸியா, தமது தோழிகளின் மூலம் அறிமுகமான சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டுவருகிறார். தற்போது சீன வானொலி நேயர் குடும்பத்தில் இணைந்ததன் அடையாளமாக நேயர் எண் பெற்றது குறித்து பெருமகிழ்ச்சியடைவாதாவும் கூறியுள்ளார்.


கலை: வளவனூர், புதுப்பாளையம் எஸ். செல்வம் எழுதிய கடிதம். செப்டம்பர் 2ம் நாள் செய்திகளில், இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியடிகளின் உருவம் இடம்பெறும் சிறப்பு நாணயத்தை தென்னாப்பிரிக்கா வெளியிட்டது குறித்த தகவலை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இது காந்தியடிகளுக்கு அளித்த மதிப்புமட்டுமல்ல, இந்திய நாட்டுக்கே கிடைத்த பெருமையுமாகும். தென்னாப்பிரிக்காவில் அவருக்கு கிடைத்த அனுபவமே,இந்திய விடுதலைப் போராட்டத்தான உந்துதலாக அமைந்தது. சிறப்பான இந்த தகவலை வழங்கிய முனைவர் ந. கடிகாசலம் அவர்களுக்கு என் நன்றிகள்.
க்ளீட்டஸ்: முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் எழுதிய கடிதம். நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் இடம்பெற்ற, சிச்சுவான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் கல்வி நிலை பற்றிய தகவல், சீன அரசின் நடவடிக்கைகளை எடுத்துக்குறியது. மாணவர்களின் இருப்பிடம், பள்ளி கட்டிடம் ஆகிய அடிப்படை வசதிகள் புதுப்பிக்கப்பட்டு, அவர்களது எதிர்காலத்தை நல்ல முறையில் அமைக்க பாடுபடும் அரசின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
கலை: இலங்கை, காத்தான்குடி நேயர் மு. ஹ. மு. இர்ஃபான் எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகள் எனது கல்விக்கும், பொழுதுபோக்குக்கும் உதவியாக உள்ளன. எங்கள் வீட்டின அருகிலுள்ள அனைத்து வீடுகளிலும், தொலைக்காட்சி இருக்கிறதோ இல்லையோ, வானொலிப்பெட்டிகள் நிறையவே உண்டு. பொதுவாக எல்லோரும் சீன வானொலியையே அதிகம் கேட்டு வருகின்றனர். கல்விக்கான நேரம் தவிர இதர நேரங்களில் இப்போது தமிழ் மூலம் சீனம் புத்தகத்தைத்தான் வாசித்து வருகிறேன்.


க்ளீட்டஸ்: ஆந்திரா அஸ்வபுரம், மும்பை சுகுமார் எழுதிய கடிதம். மலர்ச்சோலை நிகழ்ச்சியில், ஷாங்காய் பூங்கா வணிகதளம், 63 கிலோ எடையுள்ள ராட்சத நண்டு ஆகியவை பற்றிய தகவல்கள் அருமை. அதேபோல், கார்ட்டூன் தொலைக்காட்சி பார்க்கமுடியாமல், அமெரிக்காவில் சிறுமிகள் செய்த போராட்டம் பற்றிய தகவல் சுவையாக இருந்தது.
கலை: சுவையான பண்பாட்டு நடவடிக்கைகள் என்ற செய்தித்தொகுப்பு குறித்து கடையாலுருட்டி, எம். பிச்சைமணி எழுதிய கடிதம். பெய்ஜிங்கில் பூப்பந்து, இறகுப்பந்து, வாள்வீச்சு முதலியவை உட்பட ஏராளமான கலைநிகழ்ச்சிகளை மக்களுக்கு நிகழ்த்தி காட்ட செய்யப்பட்ட ஏற்பாடுகளை குறித்து அறிந்துகொண்டேன். தாழ்ந்த கட்டணத்தில் மக்களுக்கு பண்பாட்டு விருந்தை பெய்ஜிங் மாநகரம் ஒலிம்பிக்கின் போது ஏற்பாடு செய்தமை பாராட்டுக்குரியது.
க்ளீட்டஸ்: கடந்த் ஆகஸ்ட் திங்கள் 22 தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரம் நிறுவப்பட்ட 369 ஆண்டுகள் ஆனது குறித்து சென்னை, மறைமலைநகர் எஸ். ரேணுகாதேவி, நீண்ட ஒரு தகவல் அடங்கிய கடிதத்தை அனுப்பியுள்ளார். சிறப்பான தகவலை அனுப்பிய ரேணுகாதேவி அவர்களுக்கு நன்றிகள். அவ்வாறே, தீபாவளியை ஒட்டி, வளவனூர் புதுப்பாளையம், நீண்ட ஒரு தகவல் திரட்டை மின்னஞ்சலாக அனுப்பியிருந்தார், அவருக்கும் எமது நன்றிகள்.


மின்னஞ்சல் பகுதி
பாண்டிச்சேரி, ஜி.ராஜகோபால்
சீன மகளிர் நிகழ்ச்சியில் பூத்தையல் செய்யும் பெண்களைப் பற்றி எடுத்துக் கூறிய நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது. சாதாரண வீடுகளில் கூட நுழைந்ததும், மிகச் சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்த பூத்தையல் கண்களுக்கு விருந்து படைப்பது சிறப்பு. மக்களின் கவனத்தை ஈர்க்கும் பாரம்பரியம் மிக்க கைவினைக் கலை பல்லாயிரம் பெண் தொழிளாலர்களுக்கு வாழ்க்கைக்கு துணைபுரிவதும், சீன மகளிர் தங்களுடைய கலைத் திறமையினை வெளிக்காட்டி இன்று உலகமே வரவேற்கும்படி நின்று காட்டுவதும் நிச்சயம் பாராட்டுக்குரியது.
திருச்சி அண்ணா நகர், V. T. இரவிச்சந்திரன்
அக்டோபர் 21 நாள் சீன அறிவியல் ஆய்வுக் குழுவினர் தென் துருவப் பகுதியில் மிகவும் உயரமான இடத்தில் நில அளவு ஆய்வினை நடத்தியுள்ளமை பற்றி செய்திகளில் செவிமடுத்தேன். ஒரு காலத்தில் வளர்ந்த நாடுகள் என்றும், மேலை நாடுகள் என்றும் தங்களுக்குத் தாங்களே மார்தட்டிக் கொண்ட நாடுகளால் மட்டுமே முடியும் என்றிருந்த நிலையை தற்போது சீனா பல துறைகளிலும் தகர்த்தெறிந்து வருகிறது. படிப்படியான முன்னேற்றம் என்பது பலமான அடித்தளமாக அமையும். மெல்ல மெல்ல வளர்ந்தாலும், அந்த வளர்ச்சி ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி என்பதற்கு சீனா எடுத்துக்காட்டு.


மதுரை 20, அண்ணாநகர், N. இராமசாமி
அக்டோபர் 26ம்நாள் முதல் சீனாவின் திபெத்தில் பெரும்பாலான பகுதிகள் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டன என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தற்பொழுது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது இயல்பு நிலை மீட்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டனர் என்பது ஆறுதலான தகவல்.
செந்தலை, N.S. பாலமுரளி
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றிய செய்திகள் அக்டோபர் 30ம் நாளிரவு நிகழ்ச்சிகளின் வாயிலாக அறிந்து மிக வருத்தமடைந்தேன். இயற்கைப் பேரழிவு என்பது மனிதனுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. அந்நாட்டிற்கு இந்திய அரசு உதவ முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.