உள்ளூர் நேரப்படி, 16、17ம் நாட்களில், சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் லத்தீன் அமெரிக்க நாடான கோஸ்டாரிக்காவில் அரசுப் பயணம் மேற்கொண்டார். இதற்கு பின், கியூபா, பெரு ஆகிய இரண்டு லத்தீன் அமெரிக்க நாடுகளில் அவர் பயணம் மேற்கொள்வார். மேலும், பெரு நாட்டில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களது 16வது ஆதிகாரப்பூர்வமற்ற கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார். லத்தீன் அமெரிக்க நாடுகளின் பல்வேறு தரப்புகள் ஹுச்சிந்தாவின் இப்பயணத்தில் கவனம் செலுத்துகின்றன. சீனாவுக்கும் லத்தீ அமெரிக்க நாடுகளுக்கும் இடையிலான உறவின் சீரான விரைவான வளர்ச்சியை இப்பயணம் தூண்டும் என்று தொடர்புடைய நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
கடந்த ஆண்டின் ஜுன் திங்கள் முதல் நாள், சீனா மற்றும் கோஸ்டாரிக்காவின் தூதாண்மை உறவு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. கடந்த ஒர் ஆண்டில், இரு நாட்டுறவு வளர்ச்சி விரைவாக அமைந்திருந்தது. கடந்த அக்டோபர் திங்கள், கோஸ்டாரிக்க அரசுத் தலைவர் Oscar Arias Sanchez சீனாவில் பயணம் மேற்கொண்டார். Oscar Arias Sanchezஇன் அழைப்பை ஏற்று, கோஸ்டாரிக்காவில் தற்போது மேற்கொள்ளும் ஹுச்சிந்தாவ் அரசுப் பயணமே சீன அரசுத் தலைவர் ஒருவரின் முதல் கொஸ்டாரிக்க பயணமாகும். இரு நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கிடையிலான பரஸ்பரப் பயணம், இரு நாடுகளின் உறவின் பன்முக வளர்ச்சியை முன்னேற்றும் என்பதில் ஐயமில்லை என்று சீனச் சமூக அறிவியல் கழகத்தின் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான ஆய்வகத்தின் ஆய்வாளர் Xu Shicheng கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
இப்பயணத்தில் சீனா கோஸ்டாரிக்காவுடன் 11 உடன்படிக்கைகளில் கையொப்பிடும். தாராள வர்த்தக பேச்சுவார்த்தையை துவங்குவதாக இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் அறிவிப்பர். இப்பயணத்தின் மூலம், இரு தரப்புகளின் உறவின் ஆழமான வளர்ச்சி தூண்டப்படும் என்றார் அவர்.
கோஸ்டாரிக்கா அமைந்துள்ள மத்திய அமெரிக்கக் கண்டத்தில் சில நாடுகள், சீனாவுடன் தூதாண்மை உறவை கொண்டிருக்கவில்லை. நவம்பர் 5ம் நாள், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியப் பிரதேசத்துக்கான சீனாவின் கொள்கை பற்றிய ஆவணத்தையை சீன அரசு வெளியிட்டதை தொடர்ந்து, ஹுச்சிந்தாவின் இப்பயணத்தின் மூலம், பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகள், குறிப்பாக மத்திய அமெரிக்க நாடுகளுடன், தூதாண்மை உறவை அதிகாரப்பூர்வமாக நிறவி வளர்க்க சீனா விரும்புகின்றது என்று Xu Shicheng தெரிவித்தார். அவர் மேலும கூறியதாவது:
இவ்வாவணத்தின் படி, ஒரே சீனா என்ற கொள்கையின் அடிப்படையில், மத்திய அமெரிக்க நாடுகளுடன், தூதாண்மை உறவை வளர்க்க சீனா விரும்புகின்றது. அத்துடன், தைவானுக்கும் மத்திய அமெரிக்க நாடுகளுக்குமிடையில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை சீனா எதிர்க்கப் போவதில்லை. இதர மத்திய அமெரிக்க நாடுகளுடனான சீனாவின் உறவை ஹுச்சிந்தாவின் கோஸ்டாரிக்கா பயணம் தூண்டும் என்று நான் நம்புகின்றேன் என்றார் Xu Shicheng.
தவிரவும், உலக நிதி நெருக்கடி தீவிரமாகிய நிலைமையில், ஹுச்சிந்தாவின் பயணம் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. லத்தீன் அமெரிக்க கண்டத்தில் சீனாவின் செல்வாக்கு, ஆசிய-பசிபிக் பிரதேசப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தின் இணக்கமான சீரான வளர்ச்சியை தூண்டுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன-லத்தீன் அமெரிக்க உறுவ பற்றிய ஆய்வில் ஈடுப்படும் அர்ஜென்டீனாவின் Salta கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுத் துறையின் தலைவர் Marin A.Rodriguez கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் பயணம் மேற்கொள்ளும் நேரம் மிகவும் பொருத்தமானது. எதிர்வரும் ஆண்டுகலின் லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு இது நம்பிக்கையை தந்தது. எடுத்துக்காட்டாக, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீயியப் பிரதேசத்துக்கான சீனாவின் கொள்கைகள் பற்றிய ஆவணமும் இப்பயணமும், சோயா அவரை உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட்களின் விலை சர்வதேசச் சந்தையில் மீண்டும் உயர்ந்ததை தூண்டியது என்றார் அவர்.
கடந்த சில ஆண்டுகளில், பல்வேறு துறைகளிலான சீனா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒத்துழைப்பு சீராக முன்னேறியுள்ளது. சீனத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க மேலும் அதிகமான லத்தின் அமெரிக்க நாடுகள் விரும்புகின்றன என்று Marin A.Rodriguez தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சீனா நம்பிக்கையை தருகிறது. சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியால், இறக்குமதிக்கான சீன உள் நாட்டுச் சந்தையின் தேவை தொடர்ந்து விரிவாகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் உற்பத்தி்ப் பொருட்கள், சீனச் சந்தையின் தேவையை நிறைவேற்றலாம். தற்போதைய நிதி நெருக்கடியில், சீனா இன்னும் திறப்பு மனப்பாங்கை நிலைநிறுத்துகின்றது. இது, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சிறந்த வளர்ச்சி வாய்ப்பாகும் என்றார் அவர்.
|