சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவும் கோஸ்டாரிக்க அரசுத் தலைவர் Oscar Ariasஉம் நேற்று San Jose நகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். தூராண்மை உறவை நிறுவிய பின், இரு நாட்டுறவின் வளர்ச்சியை இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக பாராட்டினர். அத்துடன், முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, உடன்படிக்கையை உருவாக்கினர்.
கடந்த ஆண்டுகளிலான சீன-கோஸ்டாரிக்க உறவின் வளர்ச்சியை ஹுசிந்தாவ் ஆக்கப்பூர்வமாக பாராட்டினார். அத்துடன், சீனாவும் கோஸ்டாரிக்காவும் தூராண்மை உறவை நிறுவுவது இரு நாடுகள் மற்றும் அவற்றின் மக்களின் நலன்களுக்கு பொருந்தியதாக அவர் தெரிவித்தார். முதலவதாக, சீன-கோஸ்டாரிக்க ஒத்துழைப்பு நட்புறவின் வளர்ச்சித் திசையை கிரக்கித்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, சீன-கோஸ்டாரிக்க ஒத்துழைப்பு நட்புறவின் முக்கிய அமைப்பு முறையை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, சீன-கோஸ்டாரிக்க ஒத்துழைப்பு நட்புறவின் சமூக அடிப்படையை வளர்க்க பாடுபட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஹுசிந்தாவின் ஆலோசனைகளுக்கு Oscar Arias உடன்பாடு தெரிவித்தார். இப்பயணம் இரு நாட்டு தூதாண்மை மற்றும் பொருளாதார வர்த்தக உறவின் வளர்ச்சியை மீண்டும் தூண்ட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். துறைமுகம் மற்றும் புதிய உயர் தொழில் நுட்ப மண்டலத்தின் ஆக்கப்பணி, சீன மொழி கற்பித்தல் ஆகிய துறைகளில், சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த கோஸ்டாரிக்கா விரும்புகின்றது என்று அவர் தெரிவித்தார்.
|