சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் நேற்றிரவு கியூபாவின் தலைநகரான ஹவானாவை சென்றடைந்து, கியூவாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள துவங்கினார்.
கியூபாவில் மீண்டும் பயணம் மேற்கொள்வதற்கு தாம் சந்தோஷம் அடைவதாக ஹுசிந்தாவ் விமான நிலையத்தில் வெளியிட்ட எழுத்து மூல உரையில் கூறினார்.
நீண்டகாலத்தில், சீன-கியூப மக்களுக்கிடையில் ஆழ்ந்த நட்பு நிலைநிறுத்தி வருகின்றது. சீன-கியூப நட்புறவை வலுப்படுத்துவது என்பது இரு நாட்டு பொது ஆவலாகும் என்று ஹுசிந்தாவ் கூறினார். நட்பை அதிகரித்து, ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, கியூபாவுடன் இணைந்து, இரு நாட்டு ஒத்துழைப்பு நட்புறவை தூண்டுவது என்பது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் கூறினார். நேற்று பிற்பகல், ஹுசிந்தாவ் கோஸ்டாரிக்காவில் பயணத்தை இனிதே முடித்துக்கொண்டுள்ளார்.
|