• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-19 14:03:27    
முதலடி கொடுத்து முன்னிலையை பெறு

cri
மாபெரும் ச்சின் வம்சத்திற்கு முடிவுக்கு காரணமானவர்களில் முக்கியமானவர்களில் ஷியாங் லியாங்கும் அவனது மருமகன் ஷியாங் யுவும் குறிப்பிடத்தக்கவர்கள்.
கி.பி 209 ஆம் ஆண்டு வாக்கில் ச்சின் வம்சக்காலத்தின் அந்திம காலத்தில், எங்கெங்கும் புரட்சியும், போராட்டமும் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் குய்ஜியின் நிர்வாகத்தலைவன் ஷியாங் லியாங்கை சந்திக்கச் சென்றார். ஷியாங் லியாங்கை நோக்கி, எவன் முதலில் முந்திக்கொண்டு முதல் அடியை கொடுக்கிறானோ, அவனே முன்னிலை பெறுவான். தாமதிக்கும் மற்றவனோ, அடிபணிய நேரிடும். எனவே என்னோடு இணைந்து புரட்சிக்கு தோள்கொடுக்க அழைக்க வந்துள்ளேன். உடனே என்னோடு வந்துவிடு" என்றார்.
உடனே ஷியாங் லியாங்கும் குய்ஜியின் நிர்வாகியின் குரலுக்கு செவி சாய்த்து, அவனுக்கு தோள் கொடுக்க, ஆதரவாக அவனோடு இணைந்துகொள்ள ஒப்புக்கொண்டவன் போல் பாசங்கு செய்தான். பின் தன் மருமகன் ஷியாங் யுவிடம் குய்ஜியின் நிர்வாகியையும் அவனது ஆதரவாளர்களாக் நின்ற 100 பேரையும் கொல்லுமாறு கூறினான். பின்னாளில் கொல்லப்பட்ட நிர்வாகியின் கீழிருந்த குய்ஜி மக்கள் அனைவரும் ஷியாங் லியாங்கின் ஆதரவாளர்களாயினர். மட்டுமல்ல ச்சின் வம்சகாலத்தை முறியடித்து முடியிறக்க ஷியாங் லியாங்கிற்கு உறுதுணையாய் இருந்தார்கள்.
ஆக, முதலில் செயல்படுபவன் தாமதமான மற்றவர்களை அடிபணியச்செய்வான், தனக்கு கீழ் கொண்டுவருவான் என்பதை சொல்ல, முதலடி கொடுத்து முன்னிலையை பெறு xian fa zhi ren என்ற சொற்றொடரை சீன மக்கள் பயன்படுத்தினர்.