• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-19 14:06:41    
சீன தேசிய மேசைப்பந்து சாம்பியன் பட்டப்போட்டி

cri
2008ம் ஆண்டு சீன தேசிய மேசைப்பந்து சாம்பியன் பட்டப்போட்டி 17ம் நாள் சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள சாங் சியா காவ் நகரில் துவங்கியது.
இப்போட்டியில் ஆடவர் மகளிர் குழுப் போட்டிகளும், ஆடவர் மகளிர் ஒற்றையர் போட்டிகளும், ஆடவர் மகளிர் இரட்டையர் போட்டிகளும் கலப்பு இரட்டையர் போட்டியும் அடங்குகின்றன. சீனாவின் 30 ஆடவர் அணிகளும் 28 மகளிர் அணிகளும் இப்போட்டியில் கலந்துகொள்கின்றன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மேசைப்பந்து சாம்பியன் பட்டம் பெற்ற மா லின், சாங் யீ நின் உள்ளிட்ட சீனாவின் புகழ்பெற்ற மேசைப்பந்து வீரர்களும் வீராங்கனைகளும் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர். இப்போட்டி 24ம் நாள் முடிவடையும்.

சர்வதேச நகரமான பெய்ஜிங்கில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் பணி புரிந்து, கல்வி பயின்று, வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை, மிகச் செழுமையானது. பல்வகை விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர். பனி ஹாக்கி, இவற்றில் ஒன்றாகும்.
குளிர்காலத்தில் நுழைந்த பின், அனைத்து சனிக்கிழமை இரவும், பெய்ஜிங் சாவ் யாங் பாதை பனி விளையாட்டு மையத்தில், 2 பனி ஹாக்கிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் கலந்துகொள்கின்ற வீரர்கள், பெய்ஜிங்கில் வாழ்கின்ற வெளிநாட்டவராவர். இதனால், இப்போட்டிகளின் பெயர், பெய்ஜிங் சர்வதேச பனி ஹாக்கி தொடர் போட்டியாகும். இப்போட்டிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என்ற போதிலும், இவை சாம்பியன் பட்டப்போட்டியோ தொழில் முறை தொடர் போட்டியோ அல்ல. உடல் கட்டாக வைத்துக்கொள்ளவும் மகிழ்ச்சிகரமான நட்பு ரீதியிலான போட்டியாக மட்டுமே.

இவை அமைகின்றன. கனடாவைச் சேர்ந்த கட்டுமான சிற்பி பிளம்மர், கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் பணி புரிந்து வருகிறார். இப்போட்டிகளை ஏற்பாடு செய்பவர்களில் அவர் ஒருவராவார். 1990ம் ஆண்டின் துவக்கத்தில், சீனாவில் வெளி நாட்டவர்கள் பனி ஹாக்கி போட்டியை ஏற்பாடு செய்தனர். அப்போது 2 அணிகள் மட்டுமே இருந்தன. 2003ம் ஆண்டில் மேலும் அதிகமானோர் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர். 2004ம் ஆண்டு பெய்ஜிங் சர்வதேச பனி ஹாக்கி போட்டி அதிகாரப்பூர்வமாக முதல் முறை நடைபெற்றது. தற்போது, 5 அணிகளின் 100க்கு மேலானோர் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர். அவர் கூறியதாவது—
ஆசிரியர், கட்டுமான பொறியியலாளர், தூதரகத்தின் பணியாளர், வழக்கறிஞர், மாணவர் ஆகிய பல்வேறு நிலைகளில் உள்ளோர் இவ்வீரர்கள் என்றார் அவர்.
பல்வகை பணிகளில் ஈடுபட்ட போதிலும், பனி ஹாக்கியால், இந்த வெளிநாட்டவர்கள் ஒன்று திரண்டனர். இப்போட்டிகள் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. இதனால், ஆட்டமிடம், வசதிகள் பானம் ஆகிய தொகைக்கு, ஆண்டுதோறும், இவர்கள், 2500 யுவான் கொடுக்க வேண்டும். செலவைக் கட்டுப்படுத்தும் வகையில், போட்டியில் கலந்துகொள்ளாத வீரர்கள் விளையாட்டுப் போட்டியின் நடுவராகவும்

விளையாட்டரங்கின் பணியாளராகவும் மாறுகின்றனர். அனைத்து வீரர்களும், தொடர் போட்டியின் தன்னார்வத் தொண்டர்களாகவும் இருக்கின்றனர்.
ஓய்வு நேரப் போட்டியாக இவை அமைந்துள்ள போதிலும், ஆட்டங்களின் விதிமுறை முழுமையானது. செப்டம்பர் திங்கள் முதல் அடுத்த மே திங்கள் வரை, இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இக்காலத்தில் அனைத்து அணிகளும், 25 போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும். தரவரிசைப்படி, இறுதிப்போட்டி நடைபெறும். சாம்பியன் அணி உருவாகும். புள்ளிவிபரப்படி, மிகச் சிறந்த வீரர் தேர்வு செய்யப்படுவார். போட்டித்தன்மையை அதிகரிக்க, சிறப்பு முறையில் அணிகள் உருவாக்கப்படுகின்றன.