அண்மையில் சீனாவின் திபெத் மொழியைச் சேர்ந்த பௌத்த இறையியல் கல்லூரி பெய்ஜிங்கின் மேற்கு மஞ்சள் கோபுரத்தில் 4வது திபெத் மரபுவழி பௌத்தம் தொடர்பான உயர் நிலை பட்டம் வழங்கும் விழா நடத்தியது. 6 நாட்களாக வெளிப்படையான வாய் வழித் தேர்வு, திருமறை வழிபாடு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின் 11 தலைசிறந்த புத்த குருமார் தேர்ச்சியடைந்தனர். கொளரவ சின்னத்தை வெளிபடுத்தும் முனைவர் பட்டத்திற்கு இணையான"தொராம்பா"என்னும் திபெத் மரபுவழி பௌத்தத்தின் உயர் நிலையான பட்டத்தை அவர்கள் பெற்றுள்ளனர்.
மேற்கு மஞ்சள் கோபுரத்தில் 11வது பெசான் எர்தெனி ஜெச்சிச்சாம்பு இந்த 11 புத்த குருமார்கள், திபெத் மரபுவழி புத்தமத பட்டம் வழங்கும் பணிக்கு வழிக்காட்டும் குழு, பரிசீலணை குழு உறுப்பினர்கள் ஆகியோரின் வழிப்பாட்டை ஏற்றுக் கொண்டார். திபெத், சிச்சுவான், சிங்காய், கான்சூ, யுநான் முதலிய மாநிலங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசத்தின் உயர் நிலையான புத்த மத பெரியோர்கள் மற்றும் இதர மத குருமார்கள் ஆக 300 பேர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் துணை தலைவரும் சீநக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் ஐக்கிய முன்னணி வேலை இலாகாவின் அமைச்சருமான துங் சிங் லிங் 18ம் நாள் அவர்களுடன் சந்தித்துரையாடினார். திபெத் மற்றும் திபெத் இன மக்கள் வாழும் இதர பிரதேசங்களின் வளர்ச்சி மற்றும் நிதானத்திற்கு இயன்ற பங்காற்றுமாறு துங் சிங் லிங் அவர்களை ஊக்குவித்துள்ளார்.
|