உள்ளூர் நேரப்படி 18ம் நாள், சீன அரசு தலைவர் ஹூ ச்சிந்தாவ், கியூபாவின் தலைநகரான ஹவானாவில் கியூப அரசவை மற்றும் அமைச்சரவைத்யின் தலைவரான raul castro உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
raul castro உடனான பேச்சுவார்த்தையின் போது, அரசியல் உறவை நெருக்கமாக்குவது, பொருளாதார மற்றும் வர்த்தகப் பரிமாற்றத்தை ஆழமாக்குவது, மானிட வள மற்றும் சமூகத் துறைகளிலான பரிமாற்றத்தை விரிவாக்குவது, பல தரப்பு விவகாரங்களிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகிய இரு நாட்டுறவை வளர்ப்பதற்கான 4 ஆலோசனைகளை ஹுச்சிந்தாவ் முன்வைத்தார். ஹுச்சிந்தாவ் வெளியிட்ட இரு நாட்டுறவு பற்றிய கருத்துக்கும் இரு தரப்புகளின் உறவை வளர்க்கும் ஆலோசனைகளுக்கும் raul castro ruz உடன்பாடு தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு பின், பொருளாதாரம், வர்த்தகம், கல்வி முதலிய துறைகளிலான ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் பற்றிய கையொப்பமிடு நிகழ்வில் இரு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
தவிரவும், கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் Fidel Alejandro Castroவை ஹுச்சிந்தாவ் சந்தித்து அளவளாவினார். நாட்டின் அரசுரிமையை பேணிக்காத்து, ஆக்கிரமிப்பை எதிர்க்கும் கியூப மக்கள், நேர்மையான போராட்டத்துக்கு சீனா முன்பு போலவே ஆதரவு அளிக்கும் என்று ஹுச்சிந்தாவ் தெரிவித்தார். கியூபாவுக்கு இயன்ற அளவில் சீனா தொடர்ந்து உதவியை வழங்கும் என்றும் அவர் கூறினார். கியூபாவின் கட்சி, அரசு மற்றும் மக்கள், சீனாவின் கட்சி அரசு மற்றும் மக்களுடன் இணைந்து, இரு நாட்டு நட்புறவை முன்னேற்ற வேண்டும் என்று Fidel Alejandro Castro தெரிவித்தார்.
|