
திபெத்தில் உள்ள எழில் மிக்க இயற்கை காட்சியானது, இங்கு முதன்முதலாகச் சுற்றுலா மேற்கொள்வோரின் கண்களுக்கு விருந்தாகின்றது. இங்கு, வானம் தெள்ளத்தெளிவாக உள்ளது. கைக்கு எட்டும் தூரத்தில் மேகத்தைப் பார்க்கும் போது, அதனுடன் உரையாட, உறவாட வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். உறைபனி படர்ந்த மலைகள், அமைதியாகவும் கம்பீரமாகவும் காணப்படுகின்றன. அவற்றின் அடிவாரத்திலுள்ள ஏரிகள், உங்களைத் தேவலோகத்திற்கு அழைத்துச்செல்லும். ஓ, எவ்வளவு அழகானது, திபெத். திபெத்தில் ஏகப்பெரும்பாலோர் புத்த மதத்தின் மீது நம்பிக்கை கொள்கின்றனர்.

கி.பி. 7வது நூற்றாண்டில் சீனாவின் இதர பிரதேசங்களிலிருந்தும் நேபாளம் இந்தியா ஆகியவற்றிலிருந்தும் திபெத்துக்குப் பரவிய புத்த மதம் உள்ளூர் பொன் மதத்துடன் ஒன்றிணைந்த பின், புத்த மதத்தின் முக்கியமானதொரு கிளையான திபெத் புத்தமதமாக உருவாயிற்று. நாட்கள் செல்லச் செல்ல, அது உள்ளூர் மக்களின் மிக முக்கியமான மத நம்பிக்கையாக மாறி விட்டது.

|