
திபெத் பிரதேசத்தில் வாழும் மக்களும் இங்கு சுற்றுலா வரும் பயணிகளும் அடிக்கடி பிரார்த்தனை இசையைக் கேட்க முடியும். 60 வயதைத் தாண்டிய சாங் சியாவ் பிங் என்பவர், பெய்ஜிங்கில் செய்திமுகவராகப் பணியாற்றினார். அவர் 17 முறை திபெத் சென்றிருக்கிறார். அங்கு 6 ஆண்டுகள் பணி புரிந்தார். திபெத்தின் பல இடங்களுக்கு வருகை தந்த இவர், ஒரு திபெத்தியப் பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். நான் பத்து முறை திபெத் சென்றிருக்கிறேன். இருந்தும், அது எப்போதும் உயிர்த்துடிப்புடன் கூடிய ஒளிமயமான பல வண்ண உலகமாக என் கண்ணுக்குத் தென்படுகிறது. படித்து முடிக்காத கலைக்களஞ்சியம் போல் திபெத் உள்ளது.

வானம், பூமி, இயற்கை இவற்றை திபெத் இன மக்கள் மதித்து, பயபக்தியுடன் இருப்பது, என்னை நெகிழச்செய்துள்ளது. அவர்கள் இயற்கையின் பிறவி, பேரன் பேத்திகள் போல் இருக்கின்றனர். இதனால் இவர்கள் நன்றியுடையவர்களாக விளங்குகின்றனர்.

|