
மன்னர் கசார் சுய சரிதை எனும் காவியம் உலகில் மிக நீளமான காவியமாகும். கசார் துவக்கத்தில் ஒரு தேவர். பிசாசுகளை வென்றடக்க மக்களுக்கு உதவும் வலையில், அவர் மனித உலகிற்கு வந்தார். அவர் போரிடும் ஆற்றல் மிக்கவர். அளவற்ற தெய்வீக ஆற்றல் உடையவர். நீரும் மீனும் போல் மக்களுடன் பழகுவார். தம் புனிதப் பணியை நிறைவேற்றிய பின் தேவலோகத்துக்குத் திரும்பினார். சீன அரசு, கடந்த பல பத்து ஆண்டுகளில் அதிகமான அளவு மனித மற்றும் நிதி ஆற்றலைச் செலவிட்டு, இக்காவியத்தை எழுத்து வடிவ மற்றும் ஒளி நாடா வடிவமாக்கி, பாதுகாத்துள்ளது.

இக்காவியமானது, திபெத் இனத்தின் கலைக்களஞ்சியமாகும். இதில் காணப்படும் பெரும்பாலான பாடல்கள், திபெத் இன மக்கள் விரும்பிக் கேட்கும் நாட்டுப்புறப்பாடல்வடிவில் எழுதப்பட்டவை. பண்டைக்கால திபெத் இனமக்களின் மதச் சடங்குகள், போர் முறைகள், சமூகப் பழக்க வழக்கங்கள், திருமண மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகியவை இக்காவியத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

|