• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-20 15:57:56    
சந்தை நம்பிக்கை அதிகரிக்கும் நடவடிக்கை

cri

அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதென்ற 4 இலடசம் கோடி யுவான் மதிப்புள்ள திட்டத்தை சீனா நவெம்பர் 9ம் நாள் வெளியிட்டது. இது உலக முழுவதிலும் உட்சாகமான எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்து சந்தை நம்பிக்கையை தூண்டி சீனப் பொருளாதாரத்தின் தொடரவல்ல நிதானமான வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கு இது துணை புரியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் தற்போதைய உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி நிலைமை மற்றும் சர்வதேச பொருளாதார நெருக்கடி குறித்து தாமதமில்லாத அதிகரிப்பை உத்தரவாதம் செய்யும் வலிமைமிக்க அறிகுறியாகும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தொழில் வளர்ச்சி ஆய்வகத்தின் தலைவர் ஹு சன் லி கருதியுள்ளார்.

தற்போது அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலகமுழுவதையும் பாதித்துள்ளது. சீனப் பொருளாதாரத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையில் நமது பொருளாதார அதிகரிப்புப் போக்கை நிலைநிறுத்தும் வகையில் திட்டவட்டமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது இயல்பே என்று தலைவர் ஹு சன் லி கூறினார்.

இத்திட்டத்தின் படி 2010ம் ஆண்டின் இறுதிக்குள் சீனா 40 இலட்சம் கோடி யுவானை ஒதுக்கீடு செய்யும். அடிப்படை வசதி கட்டுமானம், பொதுப் போக்குவரத்து, உயிரினச் சுற்றுசூழல் ஆக்கப் பணி, பேரிடருக்கு பிந்திய கட்டுமானம், பயணியர் திட்டப் பணிகள் நகர மற்றும் கிராமப்புற வாசிகள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோரின் வருமானத்தை உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இத்தொகை பயன்படுத்தப்படும். அதேவேளையில் சீன நிதிக் கொள்கை நிதானத்திலிருந்து விறுவிறுப்பாகவும் நாணய கொள்கை சிக்கனத்திலிருந்து உகந்த தளர்ச்சியாகவும் மாற்றம் பெறும்..

மேற்கூறிய நடவடிக்கைகளின் மூலம் சீன அரசு பொருளாதாரத்தை முன்னேற்றும் அதேவேளையில் மனித முதன்மை, இணக்கமான சமூகத்தை உருவாக்குவதென்ற வளர்ச்சி கண்ணோட்டத்தை வெளிகாட்டியுள்ளது என்று சீன அரசவையின் வளர்ச்சி ஆய்வு மையத்தின் துணைத் தலைவர் லியூ ஸ் ஜிங் கருத்து தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது நடப்பு உள்நாட்டுத் தேவையை விரிவாக்குவதன் முக்கிய தனிச் சிறப்பியல்பாக திகழ்கின்றது. இந்த பத்து நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொது மக்கள் மிகப் பல நலன்களை பெறுவார்கள். எடுத்துக்காட்டாக காப்புறுதித் தன்மை வாய்ந்த வீட்டு வசதித் துறைக்கான முதலீடு அதிகரிக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதாரம், கல்வி ஆகியவற்றிலான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். உறைவிடம், கல்வி, மருத்துவ சிகிச்சை, சுகாதாரம், முதுமைக்கால காப்புறுதி ஆகியவை மக்கள் மிகவும் அக்கறை செலுத்தும் விடயங்களாகும். இவற்றை வலுப்படுத்தினால் மக்களின் கவலைகள் குறையும் என்று லியு ஸ் ஜிங் கூறினார்.

2007ம் ஆண்டில் சீனாவின் நிதி வருமானம் 50 இலட்சம் கோடி யுவானை தாண்டியது. சீரான நிதி வருமான சூழ்நிலை பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு வலிமையான நிதி ஆதரவு அளித்துள்ளது. நீண்டகால அரசுக் கடன், அரசின் வரவு செலவுத் திட்டத்தில் நிலையான சொத்துக்களிலான முதலீட்டு விழுக்காட்டை அதிகரிப்பது என்பன நிதி மூலவளமாக கருதப்படுகின்றது.

20 நாடுகள் குழுவின் நிதி உச்சி மாநாடு துவங்கும் முன் சொந்த விடயத்தை செவ்வனே செய்வது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு ஆற்றுவதாகும் என்பது சீனா இந்த திட்டத்தை வெளியிட்டமையின் நோக்கமாகும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது சீனப் பொருளாதாரத்தின் அடிப்படை சீராகியுள்ளது. உள்ளார்ந்த உள்நாட்டுத் தேவை மிக அதிகமாகும். நாணய அமைப்பு முறை நிதானமானது. ஆகவே நிதி நெருக்கடியை சமாளிப்பதில் சீனாவுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்று சீன அரசு புள்ளிவிபர ஆணையத்தின் தலைமை பொருளியலாளர் யோ ஜிங் யியான் கூறினார்.