குவெய்யாங் மாவட்டத்தின் பயணம் 2
cri
முற்பகல் 9 மணியளவில் குவெய்யாங் நகர அரங்கில் (Town Hall of the City) செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. நகர அரசின் தலைவர்கள் பற்றிய அறிமுகத்திற்கு பிறகு செய்தியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள். சர்வதேச சீன மற்றும் சீன தேசிய வானொலி நிலையங்களிலிருந்து வருகை தந்திருந்த குழுவினர், சீன நாளேட்டின் பிரதிநிதி மற்றும் பீக்கிங் பல்கலைக்கழக பேராசிரியர் Wang Fengxin அனைவரும் வரவேற்கப்பட்டனர்.
 மாநிலங்கள் அவை தகவல் தொடர்பு அலுவலக இயக்குனர் Huang Junxian செய்தியாளர்களுக்கு குவெய்யாங்கை பற்றி விளக்கினார். குவெய்யாங் கோடைகால வாழிடம் என்ற மையக்கருத்தில் செய்தியாளர் கூட்டம் அமைந்தது. சிறந்த கோடைகால வாழிடமாக இருக்கின்ற குவெய்யாங்கை சீன மற்றும் உலக மக்கள் அனுபவிக்க செய்வதே நோக்கமாக கொள்வதாக Huang Junxian கூறினார். குவெய்யாங் பல்வேறு இயற்கையான செல்வங்களை பெற்றிருந்தாலும், மூன்று நிலைகளில் அளவிடற்கரிய ஆற்றல் பெற்று விளங்குகிறது. மாநிலங்கள் அவை தகவல் தொடர்பு அலுவலக இயக்குனர் Huang Junxian
 முதலாவதாக குவெய்யாங் அமைவிடம். நிலப்பரப்பு உயர்ந்த தாழ்ந்த பகுதிகளாக காணப்படுகின்றன. மலைகளும் குன்றுகளும் நிறைந்து காணப்படும் குவெய்சொவில் 500 முதல் 2000 மீட்டர் வரையிலான நிலப்பரப்பு காணப்படுகிறது. குவெய்யாங்கில் 1000 மீட்டர் உயரத்திலான நிலப்பரப்பே பெரும்பான்மையாக இருப்பதால் மக்கள் சுமூகமாக நல்ல முறையில் வாழும் நிலை இங்கு இயற்கையாக நிலவுகிறது. மனித குலத்திற்கு அது செழிப்பாக வழ்வதற்கு தேவையான இயற்கை வளங்கள் உள்ள குவெய்யாங் அனைவருக்கும் தெரிய வர வேண்டும். மனித குலத்திற்க ஏற்ற காலநிலையும், தேவையான அளவிலான காற்றின் வேகமும் காணப்படுவது குவெய்யாங்கின் இரண்டாவது சிறப்பு அம்சமாகும். குவெய்யாங்
 காலநிலை இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் போன்று சிறப்பாக உள்ளது. சராசரியாக 24 திகரி செல்சியஸ் கெண்ட தட்ப வெப்பநிலையில் சரியான ஈரபதத்தோடு, வினாடிக்கு 2 முதல் 3 மீட்டர் வேகமான காற்று இயற்கை சூழலின் நிலை மக்கள் வாழ்க்கையை இன்பமூட்டுகிறது. இங்கு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடைகாலமாக இருக்கிறது. அப்போது அதிகபட்ச வெப்பநிலை 25 முதல் 28 திகிரி வரையாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 17 முதல் 20 திகிரி. மூன்றாவதாக மிகவும் நல்ல காற்று தரத்தோடு, நாள்தோறும் 13 மணிநேர சூரிய ஒளி இங்கு கிடைக்கிறது. ஆண்டுக்கு 150 நாட்கள் இவ்வாறு சூரிய ஓளி கிடைக்கிறது. சீன தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் தர வரையறை படி ஆண்டுக்கு 230 நாட்கள் நல்ல காற்று தர வரையறையோடு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 இங்கிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குமிங் உள்ளது. அங்கு அதிகமான சூரிய ஒளி கிடைக்கின்ற நிலை நிலவுகின்றது. ஆனால் குவெய்சொவில் சரியான சூரிய ஒளி இயற்கையாக கிடைக்கிறது. குவெய்யாங் மக்களும் இந்நகரை ஒரு கோடைகால வாழிடமாக உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளனர். 1.45 மில்லியன் மூ நிலப்பரப்பில் குவெய்யாங் நகரம் விரிவாக்கப்பட்டுள்ளது.
|
|