சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் 19ம் நாள் limaவில் பெரு அரசுத் தலைவர் Alan Garciaஉடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். பல்வேறு துறைகளில் பயன் தரும் ஒத்துழைப்பை வளர்ப்பது பற்றி, இரு தரப்பினரும் முக்கிய பொது கருத்துக்களுக்கு வந்தனர். இரு நாட்டு தாராள வர்த்தக உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தை, வெற்றிகரமாக நிறைவேறியது. இரு நாடுகள், உத்திநோக்குக் கூட்டாளி உறவை அதிகாரப்பூர்வமாகக் நிறுவி வளர்க்கின்றன என்று அவர்கள் கூட்டாக அறிவித்தனர்.
இரு நாட்டுறவு, பன்முக விரைவான வளர்ச்சியின் புதிய காலத்தை வரவேற்கின்றது என்பதை சீன-பெரு உத்திநோக்குக் கூட்டாளி உறவு காட்டுகியது. மூலவளம், தொழில் நுட்பம், நிதி, சந்தை முதலிய துறைகளின் தத்தம் மேம்பாட்டை இரு தரப்பும் முழுமையாக வெளிக்கொணர வேண்டும் என்று இரு தரப்பினரும் கூறினர். சீனா, பெருவின் நல்ல நண்பராகம். சீனாவின் வளர்ச்சியை பெரு ஆதரிக்கின்றது. மேலதிக சீனாவின் சுரங்கத்தொழில் நிறுவனங்கள், பெருவில் முதலீடு செய்வதைப் பெரு எதிர்பார்க்கின்றது என்று Alan Garcia தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகு, இரு நாட்டுப் பொருளாதாரத் தொழில் நுட்பம், சுங்கத்துறை, வறுமை ஒழிப்பு, நிதி முதலிய 11 ஒத்துழைப்பு ஆவணங்களில் சீனாவும் பெருவும் கையொப்பமிட்டன.
|