காட்டு இயற்கை சூழல் பாதுகாப்பு பணியில், நட்ட ஈட்டு தொகை வழங்கப்படும் பிரதேசங்களில் ஒன்றாக திபெத் 2004ம் ஆண்டு மத்திய அரசால் சேர்க்கப்பட்ட பின், மொத்தம் 80 கோடி யுவானை சீன அரசு திபெத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால் 35 ஆயிரம் விவசாயிகளும் ஆயர்களும் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
இதில், திபெத்தின் 7 பிரதேசங்களைச் சேர்ந்த 65 மாவட்டங்கள் அடங்குகின்றன. இப்பிரதேசத்திலுள்ள ஆறுகளின் தோற்றுவாய், முக்கிய ஆறுகளின் இரு கரை, தேசிய நிலை இயற்கைப் பாதுகாப்பு பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள காட்டு வளம் பயன்தரும் முறையில் பாதுகாக்கப்பட்டது. எனவே இப்பிரதேச காலநிலையையும் நீர் வளமும் மேம்பட்டு வருகின்றது.
|