சீன-பெருவின் இன்பமான எதிர்காலம்
cri
நேற்று, சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவும், பெரு அரசுத் தலைவர் Alan Garciaவும், சீன-பெரு நாடுகளின் தொழில் முனைவோர் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உத்திநோக்குக் கூட்டாளி உறவின் வளர்ச்சியை முன்னேற்றி, இரு தரப்புகளின் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த, கூட்டாகப் பாடுபட வேண்டும் என்று இரு அரசு தலைவர்களும் ஒருமனதாக விருப்பம் தெரிவித்தனர். இவ்விருந்தில் ஹூசிந்தாவ், பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒளிமயமான எதிர்காலத்தை இணைந்து உருவாக்குவது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது, சீன அரசு, பெருவுடனான நட்பு ஒத்துழைப்புகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. Garcia உள்ளிட்ட பெரு நாட்டின் தலைவர்களுடன், சீன-பெரு நாடுகளின் உறவை மேலும் வளர்த்து, கருத்துக்களை ஆழமாக பரிமாறிக் கொண்டு, நட்புறவை ஆழமாக்கி, பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். ஒத்துழைப்புக்களை விரிவாக்கி, வளர்ச்சியைக் கூட்டாக நாடி, இரு நாட்டுறவின் புதிய நிலைமையைத் துவக்கி வைப்பது, இப்பயணத்தின் நோக்கமாகும் என்றார் அவர். அவர் மேலும் கூறியதாவது, இரு நாடுகளின் தொழில் நிறுவனங்களின் நண்பர்கள் கையோடு கை கோர்த்து, வாய்ப்புக்களை உறுதியாகப் பற்றிக் கொண்டு, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புக்களை ஆழமாக்கி, சீன-பெரு நாடுகளின் உறவின் ஒளிமயமான எதிர்காலத்தைக் கூட்டாகத் துவக்கி வைக்க வேண்டும் என்று நான் மனமார்ந்த விருப்பம் தெரிவிக்கிறேன் என்றார் ஹூசிந்தாவ். பெரு அரசுத் தலைவர் Garcia உரை நிகழஅத்துகையில், தற்போதைய சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிப்பதில் சீனா மேற்கொண்ட பங்கை, தமது உரையில் வெகுவாகப் பாராட்டினார். அதே வேளையில், சீனாவின் உத்திநோக்குக் கூட்டாளியாக மாறுவதில், பெரு நாடு பெருமை அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
|
|