பரஸ்பரம் நலன் தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இனிமையான எதிர்காலத்தை துவக்கிவைப்பது என்ற தலைப்பில், சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் lima இல், பெரு அரசுத் தலைவர் Alan García உடன் சேர்ந்து, 20ம் நாள், இரு நாட்டுத் தொழில் முன்னைவோர் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
தாராள வர்த்தக மண்டலத்தை உருவாக்குவது, இரு நாடுகளின் உத்திப்பூர்வக் கொள்கையாகும். இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை விரிவாக்குவதற்கு முக்கிய வாய்ப்புக்களைக் கொண்டுவரும். தொடர்புடைய உடன்படிக்கைகளில் வெகுவிரைவில் கையொப்பமிட்டு, பெருவுடன் இணைந்து முயற்சி செய்து, இரு தரப்பு வர்த்தகத்தின் அளவை விரிவாக்கப் பாடுபட்டு, இரு தரப்பு வர்த்தகம் சீராக வளர்வதை சீனா முன்னேற்றும் என்று ஹூசிந்தாவ் தெரிவித்தார்.
இரு தரப்பின் தராளா வர்த்தக உடன்படிக்கை, இரு நாட்டுப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்று Alan García கூறினார்.
சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் நேற்று பெரு நாடாளுமன்றத்தின் தலைவர் Javier Velásquezஐ சந்தித்துரையாடினார்.
நேற்று இரு தரப்பின் தாராள வர்த்தக உடன்படிக்கையை வெகுவாகப் பாராட்டினார். இது, இரு நாட்டு வர்த்தக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான செல்வாக்கை ஏற்படுத்தும் என்று பெரு தேசிய தனியார் தொழில் நிறுவன அமைப்புக் கூட்டணியின் தலைவர் jaime caceres sayan தெரிவித்தார்.
|