Hai Nan மாநிலத்தில் வாழ்கின்ற சிறுபான்மை தேசிய இனங்களில், லீ இனத்தின் மக்கள் தொகை, மிக அதிகம். சீனாவின் இதர பல சிறுபான்மை தேசிய இனங்களைப் போல், லீ இனம் தனிச்சிறப்பு மிக்க பழக்க வழக்கங்கள், பண்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அழகான லீ brocade எனப்படும் சித்திர வடிவிலான பூ வேலைப்பாடுகள், லீ இன மகளிர்களால் கையால் பின்னப்படும் அரிய கலைப் பொருளாக திகழ்கின்றது. மதிப்புக்குரிய விருந்தினர்களை வரவேற்கும் போதெல்லாம், லீ இன பெண்கள் அழகான பாவாடை அணிந்து, இனிமையான பாடல்களைப் பாடுகின்றனர். வண்ணமயமான பூ வேலைபாடுகளுடன் கூடிய பாவாடைகள், லீ சித்திர வடிவிலான பூவேலைப்பாடுகளால் தயாரிக்கப்படுகின்றன. லீ இன பூ வேலைப்பாடுகள், இலவம் பஞ்சு மலரின் கனியில் உள்ள முளைகுருத்தால் பின்னப்படும் ஒரு வகை வண்ணத்திலான துணியாகும். இது, சீனாவில் மிக நீண்டகால வரலாறுடைய நெசவு பொருட்களில் ஒன்றாகும்.
32 வயதான Wang Xue Bing அம்மையார், Hai Nan மாநிலத்தின் Wu Zhi Shan நகரில் உள்ள Chong Shan வட்டத்தின் Za Na கிராமத்தில் வாழ்கின்றார். பத்து வயதிற்கு பின் அவர் லீ பூ வேலைப்பாடுகளைப் பின்னுவதைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். தற்போது அக்கிராமத்தில் லீ பூ வேலைப்பாடுகள் பின்னலினால் அவர் பிரபலமாகி விட்டார். சிறு வயதில் பூ வேலைப்பாடுகள் பின்னல் நுட்பத்தினால் அவர் ஈர்க்கப்பட்டார். விரைவில் தமது தாய் மற்றும் இதர உற்றார் உறவினர்களிடமிருந்து பின்னல் நுட்பத்தை அவர் கற்றுத்தேர்ந்தார். அவர் கூறியதாவது: "பூ வேலைப்பாடுகள் பின்னுவதில் ஆர்வம் கொண்டேன். ஒரு வாரத்துக்குள் பின்னல் நுட்பத்தைக் கற்றுத்தேர்ந்தேன்" என்றார், அவர். Wang Xue Bing அம்மையாரைப் போல, ஒரு வாரத்துக்குள் லீ பூ வேலைப்பாடுகள் பின்னலைக் கற்றுத் தேர்பவர் அதிகமில்லை. பெரும்பாலோர் அதனை கற்றுக்கொள்ள, சுமார் ஒரு திங்கள் காலம் தேவைப்படுகின்றது. அதன் பிறகுதான், லீ பூ வேலைப்பாடுகள் பின்னல் நுட்பத்தை முழுமையாக அவர்களால் கிரகித்துக் கொள்ள முடியும். பூ வேலைப்பாடுகள் பின்னுவது, எளிதாக களைப்படையச்செய்யக்கூடிய வேலை. சிறு வயதில், தாம் பூ வேலைப்பாடுகள் பின்னத் துவங்கிய பின் நிறுத்த விரும்பவில்லை என்றும், சில சமயங்களில் ஒரு நாள் முழுவதும் பின்னினாலும், களைப்படையவில்லை என்றும் Wang Xue Bing அம்மையார் கூறினார். தற்போது உள்ளூர் கிராமப்புறங்களில், பழைய வீடுகளின் சீரமைப்பு திட்டப்பணி நடைமுறைக்கு வந்துள்ளது என்றும், சில நாட்களுக்கு முன், தாம் புதிய வீட்டில் குடிபெயர்ந்ததாகவும் Wang Xue Bing அம்மையார் செய்தியாளரிடம் கூறினார். புதிய வீட்டில் அலங்காரப் பணியில் ஈடுபடுவது, வயலில் உழைப்பது ஆகியவற்றைத் தவிர்த்த ஓய்வு நேரங்களில், தாம் பாவாடை பின்னுவதாக அவர் கூறினார். Wang Xue Bing அம்மையாரைப் போல், பெரும்பாலான லீ இன மகளிர் இவ்வாறு வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் வயலில் உழைப்பதோடு, பன்றிகளையும் வளர்கின்றனர். வயலில் வேலை இல்லாத நாட்களில், வீட்டில் லீ பூ வேலைப்பாடுகள் பின்னுகின்றனர். ஒரு புறம், அவர்கள் லீ பூ வேலைப்பாடுகள் பின்னுவதில் ஆர்வம் கொள்கின்றனர். மறு புறம், லீ பூ வேலைப்பாடுகளை விற்பனை செய்வதன் மூலம், அவர்கள் பணம் ஈட்ட முடிகிறது. கூட்டு நிறுவனங்களின் கோரிக்கையின் படி, அவர்கள் தத்தமது வீட்டில் பின்னலாம். பூ வேலைப்பாடுகளை பின்னிய பின், அந்நிறுவனம் அதனை வாங்கி கொள்கின்றது. அப்படியில்லாவிட்டால் மக்கள் நிறுவனங்களுக்குச் சென்றும் பின்னலாம். Wang Xue Bing அம்மையார், Hai Nan மாநிலத்தின் தேசிய இன பூ வேலைப்பாடுகள் பின்னல் கலை ஆய்வகத்தில் பணிபுரிந்திருந்தார். அவர் கூறியதாவது:
"இந்த ஆய்வகத்தில் சிறுபான்மை தேசிய இனக் கலைப் பொருட்கள் சிறப்பாக தயாரிக்கப்படுகின்றன. அவை, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன" என்றார், அவர். ஓய்வு நேரத்தில் பின்னினால், ஒரு திங்களுக்கு 2 அல்லது 3 பாவாடைகளைப் பின்னலாம். ஒவ்வொரு பாவாடையும் விற்கப்பட்ட பின், பல நூறு யுவானை ஈட்ட முடியும் என்று Wang Xue Bing அம்மையார் கூறினார். Wu Zhi Shan Li Jin Fang பண்பாட்டு வளர்ச்சி கூட்டு நிறுவனம், இப்பிரதேசத்தில் லீ பூ வேலைப்பாடுகள் கொள்வனவு செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் Wu Zhi Shan நகரில் சில மையங்களை நிறுவி, பூ வேலைப்பாடுகள் பின்னல் தொழில் செய்கின்ற மகளிரை திரட்டியது. அவர்கள் நாள்தோறும் கூட்டு நிறுவனத்தில் பூ வேலைப்பாடுகள் பின்னுகின்றனர். இந்நிறுவனத்தின் மைய மேலாளர் Lu Shao Sui அம்மையார் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில், விவசாயிகள் நாள்தோறும் 4 மணி நேரத்தில் பூ வேலைப்பாடுகள் பின்னினால், ஒரு திங்களுக்கு ஆயிரம் யுவான் ஈட்ட முடியும் என்றார். அவர் கூறியதாவது: "பெரும்பாலான கலைப் பொருட்கள், இதர மாநிலங்களின் சந்தையில் விற்கப்படுகின்றன. Hai Nan மாநிலத் தனிச்சிறப்புடைய அன்பளிப்பாக, மதிப்புக்குரிய விருந்தினர்களுக்கு இப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன. பொருட்களின் விற்பனை பரவாயில்லை. கூட்டு நிறுவனம், பொருட்களின் விற்பனைக்கு பொறுப்பேற்கின்றது. விவசாயிகள் பொருட்களின் விற்பனை பற்றி கவலைபட வேண்டியதில்லை" என்றார், அவர். Li Chun Ying அம்மையார் நீண்டகாலமாக இக்கூட்டு நிறுவனத்தில் பூ வேலைப்பாடுகள் பின்னும் பணியாளர்களில் ஒருவர். விடியற்காலை ஏழு அரை மணி முதல் மாலை 6 மணி வரை அவர் அந்நிறுவன மையத்தில் பூ வேலைப்பாடுகள் பின்னுகின்றார். வீட்டில் பின்னுவதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இங்கு இதர பெண்களுடன் இணைந்து பின்னுவது மகிழ்ச்சி தருகின்றது என்று அவர் கூறினார்.
பழமை வாய்ந்த நெசவு இயந்திரத்தைப் பயன்படுத்தி பூ வேலைப்பாடுகள் பின்னுவதை அறிந்தோர் எண்ணிக்கை குறையும் வேளையில், லீ தயாரிப்பு படிப்படியாக குறைந்து விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், Hai Nan மாநில லீ இனத்தின் பாரம்பரிய நெசவு, சாயம், பின்னல், பூத்தையல் ஆகிய நுட்பங்கள், சீனாவின் தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு செல்வத்தின் முதல் தொகுதி பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு லீ பூ வேலைப்பாடுகள் பின்னல் நுட்பத்தின் கையேற்பு மற்றும் பரவலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. Wu Zhi Shan நகரில், 80 வயதான மூதாட்டிகள், கூட ஈர்ப்பாற்றல் மிக்க இந்த பின்னல் நுட்பத்தைக் கைவிட விரும்பவில்லை. அவர்கள் நாள்தோறும் சில மணி நேரம் பின்னுகின்றனர். இங்கு பின்னல் நுட்பத்தைக் கிரகித்துக் கொண்டுள்ள மக்களில், மிக இளைய குழந்தைக்கு வயது 6 மட்டுமே. லீ பூ வேலைப்பாடுகள் பின்னல் நுட்பம் கையேற்கப்படும் போக்கில், விவசாயிகள் செல்வந்தராவதை விரைவுபடுத்தியுள்ளது. Wu Zhi Shan நகரின் வறுமை ஒழிப்பு பணியகத்தின் தலைவர் Huang Xue Mei அம்மையார் செய்தியாளருக்கு பேசுகையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்நகரில் விவசாயிகளுக்கான தொழில் திறன் பயிற்சி பள்ளி நிறுவப்பட்டது. லீ பூ வேலைப்பாடுகள் பின்னல் நுட்பம், பயிற்சி உள்ளடக்கங்களில் ஒரு பகுதியாகும். சந்தை தேவை பற்றி ஆய்வு செய்வது, நிபுணர்களை அமர்த்துவது ஆகியவற்றின் மூலம், அரசு பாரம்பரிய பின்னல் முறையை மேம்படுத்தி, விவசாயிகளின் பூ வேலைப்பாடுகள் பின்னல் நுட்பத்தின் பயனை உயர்த்தியுள்ளது என்று Huang Xue Mei அம்மையார் கூறினார். லீ பூ வேலைப்பாடுகள் பின்னல் நுட்பம், தலைமுறை தலைமுறையாக கையேற்கப்பட்டு, சீனாவின் அரிய பண்பாட்டு செல்வமாக மாற வேண்டும் என்று லீ இன மகளிர் பலர் விரும்புகின்றனர். .Wu Zhi Shan நகரின் Chong Shan வட்டத்தின் Za Na கிராமத்தின் மகளிர் சங்கத்தின் தலைவர் Huang Jin Lian அம்மையார் கூறியதாவது: "லீ இனப் பண்பாட்டை மேலும் செவ்வனே பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். லீ பூ வேலைப்பாடுகள் பின்னல் நுட்பத்தை மேலதிக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்றார், அவர்.
|