சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் 20ம் நாள், பெரு நாட்டின் நாடாளுமன்றத்தில் புதிய சீன-லத்தீன் அமெரிக்க பன்முக ஒத்துழைப்புக் கூட்டாளி உறவை கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பிலான முக்கிய சொற்பொழிவு ஆற்றினார். சீன மற்றும் லத்தீன் அமெரிக்க உறவின் வளர்ச்சியை ஹுச்சிந்தாவ் வெகுவாக பாராட்டினார். அத்துடன், லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இணைந்து, இரு தரப்பு உறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியப் பிரதேசத்தின் வளர்ச்சியில் சீனா தற்போது கவனம் செலுத்துகின்றது. 2004ம் ஆண்டில், லத்தீன் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட போது, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் நம்பிக்கையான காலச்சோதனைகளை தாக்குப்பிடிக்கக்கூடிய ஒத்துழைப்புக் கூட்டாளியாக மாற வேண்டும் என்ற சீனாவின் விருப்பத்தை ஹுச்சிந்தாவ் வெளிப்படுத்தினார். கடந்த 4 ஆண்டுகளில், பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவதில் இரு தரப்புகள் முன் கண்டிராத நிலைமையை எட்டியுள்ளன. சீனாவும் லத்தீன் அமெரிக்காவும் உண்மையான நண்பர்களாகவும், நல்ல கூட்டாளிகளாகவும் மாறியுள்ளன. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியப் பிரதேசத்திலான நாடுகளுடன் இணைந்து, சமத்துவ முறையில் பரஸ்பர நலன் தந்து கூட்டு வளர்ச்சியடையும் பன்முக ஒத்துழைப்புக் கூட்டாளி உறவை உருவாக்க தொடர்ந்து பாடுபட சீனா விரும்புகின்றது என்று ஹுச்சிந்தாவ் தனது சொற்பொழிவில் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறியதாவது:
உலகில் மிகப் பெரிய வளரும் நாடான சீனாவும், உலகின் முக்கிய வளரும் பிரதேசமான லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த நாடுகளும், மேலும் நெருக்கமாக ஒன்றுபட்டு, மேலும் உயர் நிலையிலும் பரந்த துறைகளிலுமான ஒத்துழைப்பை மேற்கொள்வது என்பது, கால ஓட்டத்தின் கோரிக்கைக்கு பொருந்தியது மட்டுமல்ல, இரு தரப்புகளின் வளர்ச்சிக்கும் தேவையாகும். இங்கே, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியப் பிரதேச நாடுகளுடன் இணைந்து, சமத்துவ முறையில் பரஸ்பர நலன் தந்து கூ்டு வளர்ச்சியடையும் பன்முக ஒத்துழைப்புக் கூட்டாளி உறவை உருவாக்க சீனா விரும்புகின்றது என்று நான் சீன அரசு மற்றும் மக்களின் சார்பில் சிறப்பான முறையில் தெரிவிக்கின்றேன் என்றார் ஹுச்சிந்தாவ்.
அடுத்து முக்கியமாக 5 துறைகளில் லத்தீன் அமெரிக்காவுடன் கூட்டாக முயற்சிகளை மேற்கொள்ள சீனா விரும்புகின்றது என்று ஹுச்சிந்தாவ் கூறினார். முதலாவதாக, அரசியல் உறவை தொடர்ந்து நெருக்கமாக்கி, உயர் அதிகாரிகளுக்கிடையிலான பயணப் பரிமாற்றத்தையும்ம் தொடர்பையும் நிலைநிறுத்தி, பல்வேறு துறைகளிலான இரு தரப்பு மற்றும் பல தரப்பு அரசியல் கலந்தாய்வு மற்றும் பேச்சுவார்த்தை அமைப்பு முறையை மேம்படுத்துவது. இரண்டாவதாக, பொருளாதார மற்றும் வர்த்தத் துறையிலான பரஸ்பர ஒத்துழைப்பை ஆழமாக்குவது. மூன்றாவதாக, காலநிலை மாற்ரம், உணவுப்பொருள் எரியாற்றல் மற்றும் நிதி பாதுகாப்பு முதலிய உலகளாவிய பிரச்சினைகள் பற்றி, தொடர்பை வலுப்படுத்தி, நிலைப்பாட்டை ஒருங்கிணைப்பது. அதன் மூலம் இருதரப்பு பொது நலன்களை பேணிக்காத்து, சர்வதேசப் பொருளாதார, நிதி மற்றும் வர்த்தக விதிமுறைகளின் வகுத்தலில் கூட்டாக பங்கெடுத்து, தனது செல்வாக்கை அதிகரித்து, சர்வதேசப் பொருளாதார ஒழுங்கு மேலும் நியாயமான திசையில் வளர்வதை முன்னேற்றுவது. நான்காவதாக, சமூகப் பணியின் வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை உயர்வு பற்றிய நிர்வாக கருத்து மற்றும் நடைமுறைகள் குறித்த பரஸ்பர கற்றறிதலை வலுப்படுத்துவது. ஐந்தாவதாக, மானிட வளத் துறையிலான பேச்சுவார்த்தையையும் பரிமாற்றத்தையும் செழிப்பாக்குவது. சீன-லத்தீன் அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு பற்றி ஹுச்சிந்தாவ் கூறியதாவது:
வர்த்தக கட்டமைப்பை பெரிதும் மேம்படுத்தி, வர்த்தக அளவின் விரிவாக்கத்தையும் வர்த்தக உறவின் சமநிலை வளர்ச்சியையும் தூண்ட வேண்டும். பரஸ்பர தொழில் துறை, அடிப்படை வசதிகளின் கட்டுமானம், எரியாற்றல், கனிம வளம் தாது, வேளாண், புதிய உயர் அறிவியல் தொழில் நுட்ப தொழில் துறை முதலிய துறைகளிலான முதலீட்டையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, தொடர்புடைய கொள்கைகளின் ஆதரவையும் வழிக்காட்டலையும் இரு தரப்புகள் அதிகரிக்க வேண்டும். தவிர, வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறைகளில் உத்திநோக்கு ஒத்துழைப்பை இரு தரப்புகளின் தொழில் நிறுவனங்கள் வலுப்படுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். சமத்துவ முறையில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு நட்பு கலந்தாய்வு செய்வதன் மூலம், பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வதில் ஊன்றி நிற்க வேண்டும். சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சித் துறைகளில், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியப் பிரதேசத்துக்கு இயன்ற அளவில் உதவி வழங்க வேண்டுமென சீனா விரும்புகின்றது என்றார் ஹுச்சிந்தாவ்.
சொற்பொழிவின் இறுதியில், சீன-லத்தீன் அமெரிக்க ஒத்துழைப்பின் எதிர்காலத்தை ஹுச்சிந்தாவ் வெகுவாக பாராட்டினார். அவர் கூறியதாவது:
சீனாவும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் விரப்பமும் ஈடுபாடும் கொண்ட நாடுகளாகும். சீன மக்கள், லத்தீன் அமெரிக்க மக்களுடன் மனதளவில் இணைந்து, இரு தரப்பு நட்புறவை வளர்ப்பதற்கு நல்ல எதிர்காலம் உண்டு. சீனாவும் லத்தீன் அமெரிக்காவும் கூட்டாக ஒத்துழைத்து, வரலாற்று ரீதியான வாய்ப்பை இறுக்கமாக பயன்படுத்தி, அருமையான எதிர்காலத்தை கூட்டாக துவக்கி வைத்து, அமைதியையும் வளர்ச்சியையும் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்று நான் உளமார விரும்புகின்றேன் என்றார் ஹுச்சிந்தாவ்.
|