இவ்வாண்டு முதல் 10 திங்கள் காலத்தில், திபெத்தின் நிதி வருமானம் 204 கோடி யுவானை எட்டியது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட இது 10.55 விழுக்காடு அதிகமாகும். திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற 2008ம் ஆண்டுக்கான நிதி இறுதி கணக்கு கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.
இவ்வாண்டு மே திங்கள் முதல், லாசா நகரின் பொருளாதார சமூக ஒழுங்கு இயல்பாக உள்ளது. திபெத் நிதி வருமானம் சீரான அதிகரிப்பை நிலைநிறுத்தி வருகின்றது. முழு ஆண்டுக்கான நிதி வருமானத் திட்டம் 4 திங்களுக்கு முன்னதாக நிறைவேற்றப்பட்டது.
|