சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் 22ம் நாள் லிமாவில் ஜப்பான் தலைமை அமைச்சர் டாரொ அசோ, கொரம்பிய அரசுத் தலைவர் உரிபே, பாபுவாநியூகிரிய அரசுத் தலைவர் சொமாரெ ஆகியோரை தனித்தனியாக சந்தித்தார். டாரோ அசோவுடன் சந்தித்துரையாடிய போது சீனா ஜப்பானுடன் இணைந்து இரு நாட்டு உத்திநோக்கு பரஸ்பர முன்னுரிமை மிக்க உறவு நிதானமாக வளரச் செய்ய சீனா விரும்புவதாக ஹுச்சிந்தாவ் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் சீன இரு நாட்டு தலைவர்கள் பரஸ்பர பயணத்தையும் தொடர்பையும் நிலைநிறுத்த வேண்டும் என்று டாரோ அசோ சந்திப்பில் விருப்பம் தெரிவித்தார். உள்நாட்டு தேவையை விரிவாக்கும் வகையில் சீன அரசு அண்மையில் வெளியிட்ட பத்து கொள்கை நடவடிக்கைகளை அவர் மேலும் உயர்வாக மதிப்பிட்டுள்ளார். பாபுவா நியூகினி தலைமை அமைச்சர் சொமாரெயுடன் உரையாடிய போது சீனாவுக்கும் பாபுவா நியூகினிவுக்குமிடையிலான உறவு பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகளுடனான சீன உறவில் ஒரு மாதிரியாகியுள்ளது. அங்கே முதலீடு செய்ய சீன தொழில் நிறுவனங்களுக்கு சீன அரசு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று ஹுச்சிந்தாவ் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஆதரவு மற்றும் உதவியை சீனா வழங்கியதற்கு பாபுவா நியூகினி நன்றி தெரிவித்ததோடு சீன தொழில் நிறுவனங்கள் அங்கே முதலீட்டையும் ஒத்துழைப்பையும் விரிவாக்குவதற்கு சொமாரெ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
|