• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-24 09:35:32    
உலக டென்னிஸ் சம்மேளனத்தின் இறுதிப் போட்டி

cri

இவ்வாண்டு உலக டென்னிஸ் சம்மேளனத்தின் இறுதிப் போட்டியான, மாஸ்டர் கோப்பை 16ம் நாள் சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஷாங்ஹாய் மாநகரில் நடந்தது முடிந்தது. செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை பெற்றார்.
இறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையின் 3வது இடத்தில் இருக்கின்ற ஜோகோவிச் 2-0 என்ற ஆட்டக்கணக்கில் ரஷியாவின் புகழ் பெற்ற வீரர் நிகோலாய் டேவிடென்கோவை தோற்கடித்து, வெற்றி பெற்றார். அவர்கள் இருவரும் மாஸ்டர் கோப்பையின் இறுதிப் போட்டியில் நுழைந்தது, இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில், கனடா வீரர் டேனியல்

நெஸ்டர், செர்பிய வீரர் நேனாத் சீமோன்ச் இணை, 2-0 என்ற ஆட்டக்கணக்கில் அமெரிக்காவின் பிரையன் கோதரர்களை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றது.
இவ்வாண்டு நடைபெற்றதே, கடைசியான மாஸ்டர் கோப்பையாகும். அடுத்த ஆண்டில், இப்போட்டியின் பெயர், உலக டென்னிஸ் சம்மேளனத்தின் ஆண்டிறுதிப் போட்டி என்று மாற்றப்படும். அது பிரிட்டனின் லண்டன் மாநகரில் நடைபெறும்.
சர்வதேச நகரமான பெய்ஜிங்கில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் பணி புரிந்து, கல்வி பயின்று, வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை, மிகச் செழுமையானது. பல்வகை விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர். பனி ஹாக்கி, இவற்றில் ஒன்றாகும்.

குளிர்காலத்தில் நுழைந்த பின், அனைத்து சனிக்கிழமை இரவும், பெய்ஜிங் சாவ் யாங் பாதை பனி விளையாட்டு மையத்தில், 2 பனி ஹாக்கிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் கலந்துகொள்கின்ற வீரர்கள், பெய்ஜிங்கில் வாழ்கின்ற வெளிநாட்டவராவர். இதனால், இப்போட்டிகளின் பெயர், பெய்ஜிங் சர்வதேச பனி ஹாக்கி தொடர் போட்டியாகும். இப்போட்டிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என்ற போதிலும், இவை சாம்பியன் பட்டப்போட்டியோ தொழில் முறை தொடர் போட்டியோ அல்ல. உடல் கட்டாக வைத்துக்கொள்ளவும் மகிழ்ச்சிகரமான நட்பு ரீதியிலான போட்டியாக மட்டுமே.

இவை அமைகின்றன. கனடாவைச் சேர்ந்த கட்டுமான சிற்பி பிளம்மர், கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் பணி புரிந்து வருகிறார். இப்போட்டிகளை ஏற்பாடு செய்பவர்களில் அவர் ஒருவராவார். 1990ம் ஆண்டின் துவக்கத்தில், சீனாவில் வெளி நாட்டவர்கள் பனி ஹாக்கி போட்டியை ஏற்பாடு செய்தனர். அப்போது 2 அணிகள் மட்டுமே இருந்தன. 2003ம் ஆண்டில் மேலும் அதிகமானோர் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர். 2004ம் ஆண்டு பெய்ஜிங் சர்வதேச பனி ஹாக்கி போட்டி அதிகாரப்பூர்வமாக முதல் முறை நடைபெற்றது. தற்போது, 5 அணிகளின் 100க்கு மேலானோர் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர்.