சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் 23ம் நாள் பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் ரஷிய அரசுத் தலைவர் திமித்ரி மெத்வதேவைச் சந்தித்துரையாடினார்.
தற்போது உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை, பனிப்போருக்குப் பிந்திய மிக சிக்கலான மாற்றத்தை எதிர்நோக்குகின்றது. சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பை சீனாவும் ரஷியாவும் கூட்டாக சமாளித்து, இரு நாட்டுப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சி போக்கை நிலைநிறுத்தும் அதேவேளையில், சர்வதேச நிதி அமைப்புமுறையின் சீர்திருத்தத்தையும் விரைவுப்படுத்த வேண்டும் என்று ஹு சிந்தாவ் கூறினார். சீன-ரஷிய அண்டை நாட்டு நட்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையின் நடைமுறை குறிப்பாணையை இரு நாடுகள் உணர்வுப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி, உத்திநோக்கு பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, முக்கிய சர்வதேச மற்றும் வட்டாரப் பிரச்சினைகள் பற்றி கருத்துக்களைப் பரிமாறி, நிலைப்பாட்டை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலக மற்றும் ஆசிய-பசிபிக் வட்டாரத்தின் அமைதி போன்ற பிரச்சினைகள் பற்றி சீனாவுடன் உத்திநோக்கு கலந்தாய்வை வலுப்படுத்த வேண்டும் என்று மெத்வதேவ் தெரிவித்தார்.
கொரிய தீபகற்ப அணு பிரச்சினை பற்றிய 6 தரப்பு பேச்சுவார்த்தை, வடகிழக்காசியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் பற்றி இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாற்றினர்.
கிரேக்கத்தில் பயணம் மேற்கொள்ள 23ம் நாள் பிற்பகல் அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் பெருவை விட்டுப் புறப்பட்டார்.
|