• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-24 13:29:41    
APEC அமைப்பின் 16வது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாடு

cri
ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் 16வது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாடு 2 நாள் நடைபெற்று 23ம் நாள் பிற்பகல் பெருவின் தலைநகரான லிமாவில் நிறைவடைந்தது. லிமா அறிக்கை, உலகப் பொருளாதார நிலைமை பற்றிய லிமா ஏபேக் தலைவர்களின் அறிக்கை ஆகியவை வெளியிடப்பட்டன. மாநாட்டில், உலகப் பொருளாதார மற்றும் நிதி நிலைமை, தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தை, உணவுப் பொருள் பாதுகாப்பு, எரியாற்றல் பாதுகாப்பு, வட்டாரப் பொருளாதாரத்தின் ஒருமைப்பாடு, காலநிலை மாற்றம் ஆகியவை பற்றி பல்வேறு உறுப்புத் தரப்புகள் ஒத்த கருத்துக்கு வந்துள்ளன. தேவையான நடவடிக்கை மேற்கொண்டு, பரஸ்பரம் ஒத்துழைத்து, மேலும் பன்முகமான ஒழுங்கான நடவடிக்கை மேற்கொண்டு, தற்போதைய சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு தரப்புகள் வாக்குறுதி அளித்துள்ளன.
ஏபெக் அமைப்பின் 21 உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர். உலகப் பொருளாதார மற்றும் நிதி நிலைமை, தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தை, உணவுப் பொருள் பாதுகாப்பு, எரியாற்றல் பாதுகாப்பு, வட்டாரப் பொருளாதாரத்தின் ஒருமைப்பாடு, தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு, காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை முதலிய பிரச்சினைகள் பற்றி அவர்கள் ஆழமாக விவாதித்தனர். முதல் கட்டக் கூட்டத்தில், உலக நிதி நெருக்கடியைச் சமாளிப்பதில் சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் எடுத்து கூறியதோடு, பல்வேறு நாடுகளும் பிரதேசங்களும் இணைந்து கூட்டாக முயற்சி செய்து, உலகப் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். வட்டாரப் பொருளாதாரத்தின் ஒருமைப்பாடு, மனித குலப் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் முதலிய பிரச்சினைகள் பற்றி அவர் 2வது கட்டக் கூட்டத்தில் சிறப்பு உரை நிகழ்த்தினார்.
22ம் நாள், உலகப் பொருளாதார நிலைமை பற்றி பல்வேறு உறுப்பு தரப்புகளின் தலைவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அண்மையில் நடைபெற்ற நிதிச் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரம் பற்றிய 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையையும், நிதிச் சந்தை சீர்திருத்தம் பற்றிய செயல் திட்டத்தையும் ஆதரிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். தவிர, தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு வடிவத்திலான பாதுகாப்பு வாதத்தை எதிர்த்து, நெருக்கமாக ஒத்துழைத்து, பன்முகமான ஒழுங்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்கள் வாக்குறுதி அளித்தனர். அடுத்த 12 திங்கள் காலத்தில், முதலீடு, சரக்கு மற்றும் சேவை வர்த்தகத்துக்குப் புதிய வர்த்தகத் தடையையும் ஏற்றுமதிக்கான புதிய தடை நடவடிக்கைகளையும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைள் உள்ளிட்ட உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வசை தவிர்க்கவும் அவர்கள் அறிக்கையில் வாக்குறுதி அளித்தனர்.
நிதி நெருக்கடி, தற்போது உலகம் எதிர்நோக்கும் மிகக் கடுமையான பொருளாதார அறைகூவல்களில் ஒன்றாகும் என்று 23ம் நாள் மாநாடு நிறைவடைந்த போது வெளியிடப்பட்ட லிமா அறிக்கை சுட்டிக்காட்டியது. அதனுடன் சேர்ந்த உலகப் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க ஏபெக்கின் உறுப்பு தரப்புகள் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளும். பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்கள் நிதி மற்றும் நாணய ஊக்குவித்தல் திட்டங்களை வகுத்து, நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய பொருளாதார மற்றும் நிதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏபெக் அமைப்பு வரவேற்பு தெரிவித்தது.
பெய்ஜிங் ஆசிய-பசிபிக் உச்சி மாநாடு, நிதி சந்தை மற்றும் உலகப் பொருளாதாரம் பற்றிய 20 நாடுகள் குழுவின் வாஷிங்டன் உச்சிமாநாடு ஆகியவற்றுக்குப் பின், உலகப் பொருளாதாரம் பற்றி விவாதிக்கும் மற்றொரு மேடை இவ்வுச்சி மாநாடாகும். உலகப் பொருளாதாரம் பற்றி வெளியிட்ட அறிக்கையும், வாஷிங்டன் அறிக்கையும் பரஸ்பர ஒன்றில் இல்லாததை மற்றது நிறைவு செய்கின்றன. ஏபெக் அமைப்பு உலகில் மிகப் பெரிய வட்டார பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பாகும். நிதி நெருக்கடியைச் சமாளித்து, உலகப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு இது மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இம்மாநாட்டின மூலம், அதன் உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கிடை பரஸ்பர நம்பிக்கையையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தி, நிதி நெருக்கடியைச் சமாளித்து, உலகப் பொருளாதாரத்தை வளர்க்கும் முழு உலகின் நம்பிக்கையை இவ்வமைப்பு மேலும் அதிகரித்துள்ளது.
அதேவேளையில், ஏபெக் அமைப்பில், வளரும் நாடுகளும், புதிதாக வளரும் நாடுகள் மற்றும் பிரதேசங்களும் அதிகமாகவுள்ளன. சர்வதேச நிதி அமைப்புமுறையின் சீர்திருத்தத்தில் அவை மேலும் அதிக பங்கு விகிக்க முடியுமா, தற்போதைய நிதி நெருக்கடியிலிருந்து விடுபட முடியுமா என்பது ஏபெக் அமைப்பின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாகும். ஆகையால், வர்த்தக மற்றும் முதலீட்டு தடையை எதிர்ப்பது, தாளார முதலீடு மற்றும் வர்த்தகத்தை விரைவுப்படுத்துவது, தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையை முன்னேற்றுவது, Bogor இலக்கை கூடிய விரைவில் நனவாக்குவது ஆகியவை பற்றி மாநாட்டில் ஒத்தக் கருத்து எட்டப்பட்டது. அவை, மேற்கூறிய நாடுகள் மற்றும் பிரதேசங்கள் பொருளாதாரத்தையும் வளர்ச்சியையும் மீட்பதற்கு முன்னேற்ற பங்கை வகிக்கும்.
நடப்பு உச்சிமாநாடு ஆக்கபூர்வ சாதனை பெற்றுள்ளது. இவ்வமைப்பின் 17வது அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாடு அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெறும். பல்வேறு தரப்புகளின் முயற்சி மூலம் ஆசிய-பசிபிக் பிரதேசம் நிதி நெருக்கடியைச் சமாளித்து, அமைதியான பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தி, பொருளாதார செழுமையை வரவேற்பது உறுதி என்று ஊடகங்கள் நம்புகின்றன.